எங்கனம்- வேதங்கள் எவ்வாறு எதனை அறிவுறுத்தியதோ; அங்கனம் அவை சொன்னவிதியால் - அவ்வாறு அவ்வேதங்கள் சொன்ன முறைப்படி; கோதுஇல் நல்வினை - குற்றமில்லாத நல்ல செயலை; செய்தவர் உயர்குவர் - செய்தவர்கள் உயர்வடைவார்கள்; குறித்துத் தீது செய்தவர் தாழ்குவர் - எண்ணித் தீமை செய்தவர் தாழ்வடைவார்கள்; இது தெரியின் மெய்ம்மை- ஆராய்ந்து பார்த்தால் இதுதான் உண்மை. |
சிறிதும் குற்றமில்லாத செயல்களை 'கோதில் நல்வினை' என்றார் குறித்தல் - மனத்தில் நினைத்தல் அறியாது தவறு செய்வாரைப் பெரியோர் மன்னிப்பர் அறிந்து செய்யும் தீமை மன்னிக்கக் கூடியதல்ல என்பதால் 'குறித்துத் தீது செய்தவர் தாழ்குவர்' என்றார். வேதங்கள் கூறும் நல்ல செயல்களைச் செய்வோர் உயர்வர் வேதங்கள் விலக்கிய தீய செயல்புரிவோர் தாழ்வர் என்பதே வேதம் ஆரம்பமுதல் இறுதி வரை கூறுவது. படைத்தல் முதலியவற்றைச் செய்து, நல்வினை தீவினைப் பயன்களை அனுபவிக்கச் செய்ய, ஒரு தலைவன் (இறைவன்) வேண்டியதில்லை என்பது கருத்து. மெய்ம்மை - உண்மை. |
(53) |
6242. | ' "செய்த மா தவம் உடைமையின், அரி, அயன், |
| சிவன் என்று |
| எய்தினார் பதம் இழந்தனர்; யான் தவம் இயற்றி, |
| பொய் இல் நாயகம் பூண்டபின், இனி அது புரிதல் |
| நொய்யது ஆகும் என்று, ஆரும் என் காவலின் |
| நுழைவார். |
| |
செய்த மாதவம் உடைமையின்- நான் செய்த சிறந்ததவம் இருப்பதால்; யான்தவம் இயற்றி- நான் தவம் செய்து, (அதன்பலனால்); பொய்இல் நாயகம் பூண்டபின் - பொய்மையில்லாத இந்த உலகத்துக்குத் தலைமை பூண்ட பின்பு; அரி, அயன் சிவன் என்று எய்தினார்- பிரமன், திருமால், சிவன் என்னும் மூவரும் (தாங்கள் அடைந்திருந்த); பதம் இழந்தார் - மேலான பதங்களை இழந்தனர்; இனிஅது புரிதல் - இனித்தமது பதவியைக் காத்துக் கொள்ள தவம் செய்வதென்பது; நொய்யதுஆகும் என்று - (எனது ஆட்சியில்) சிதைந்து அழியும் என்று நினைத்து; ஆரும் என் காவலில் நுழைவார்- பிரமன் முதலிய எவரும் என் ஆளுகைக்கு உட்படுவாராயினர். |
பொய் இல் நாயகம் - என்றும் மாறாத தலைமை. தாம் செய்த தவத்தால் தலைமை எய்தினரே அன்றி அரி முதலோரும் இயல்பான |