தலைவர்கள் அல்லர் என்பான்' செய்த மாதவம் உடைமையின் அரி அயன் சிவன் என்றெய்தினார்" என்றான் என்பதும் ஒரு பொருளாகும். |
(54) |
6243. | ' "வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி, |
| கேள்வி யாவையும் தவிர்த்தனென், 'இவை கிளர் |
| பகையைத் |
| தாழ்வியாதன செய்யும்' என்று; அனையவர்தம்பால் |
| வாழ்வு யாது ? அயல் எவ் வழிப் புறங்கொண்டு |
| வாழ்வார் ? |
| |
வேள்வி ஆதிய- புனிதமான வேள்விகள் முதலானவையும்; புண்ணியத்தவத்தொடும் விலக்கி - புண்ணியச் செயலானதவம் புரிதலையும் பிறர் செய்யாதபடி விலக்கி; கேள்வியாவையும் தவிர்த்தனென் - நல்ல நூற் கேள்வி முதலியவற்றையும் நிகழாதபடி நான் தவிர்த்து விட்டேன்; இவை கிளர் பகையை - வேள்வி முதலான இவையெல்லாம் பொங்கி எழும் பகையை; தாழ்வியாதன செய்யும்- தாழ்ந்து பணியாதவாறு செய்யும்; என்று - என்பதால் (எவரும் தவம் முதலியன செய்யாது தவிர்த்தேன்); அனையவர் தம்பால் வாழ்வுயாது- அயன் முதலானோர்க்கு (எனது ஆட்சியில்) அமைந்த நல்வாழ்வு யாது?; அயல் எவ்வழி - வேறு எந்த விதத்திலே (அவர்கள் எனக்கு மாறாக); புறங் கொண்டுவாழ்வார்- புறத்தே துணை பெற்று வாழ்வர்? |
வேள்வி ஆகிய - வேள்வி முதலானவை. தவிர்த்தனென் - விலக்கினேன். புறம் கொண்டு - புறத்தே துணையைப் பெற்று. அயல் - வேறாக. கேள்வி: வேதம் முதலியவைகளைக் கேட்டல். |
(55) |
6244. | ' "பேதைப் பிள்ளை நீ; பிழைத்தது பொறுத்தனென்; |
| பெயர்த்தும். |
| 'ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை; |
| முனிவன் |
| யாது சொல்லினன், அவை அவை இதம் என |
| எண்ணி, |
| ஓதி; போதி' என்று உரைத்தனன்-உலகு எலாம் |
| உயர்ந்தோன். |