பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 115

பேதைப் பிள்ளைநீ - நீ   அறிவு நிரம்பப் பெறாத சிறுவன்;
பிழைத்தது பொறுத்தனன்   -   செய்த பிழையைப் பொறுத்தேன்;
பெயர்த்தும் ஏது   இல்வார்த்தைகள் இனையன  இயம்பலை-
மறுபடியும் பகைவரைப் புகழ்ந்து பேசும்   சொற்களான   இவை
போன்றவற்றைச் சொல்லாதே;   முனிவன் யாது சொல்லினன்-
ஆசிரியனாகிய முனிவன் என்ன சொல்லித் தருகிறானோ; அவை
அவை இதம் என எண்ணி- அவையே நமக்கு நன்மை பயப்பன
என  நினைத்து;  ஓதி போதி என்று- (ஆசிரியனுடன்) சென்று,
கற்கத்  தொடங்குவாயாக என்று; உலகு எலாம் உயர்ந்தோன்
உணர்த்தினன்- எல்லா உலகங்களிலும் மேலாண்மை செலுத்தும்
இரணியன் கூறினான்.
 

உலகெலாம் உயர்ந்தோன் - இரணியன் உலகெங்கும் புகழ்
உயர்ந்து விளங்குபவன் என்பது பொருள். பிழைத்தது - தவறு
செய்தது. முனிவன் -பாடம் கற்பிக்கவந்த அந்தணன். இதம் -
நன்மை
   

(56)
 

பிரகலாதன் அறிவுரை
  

கலிவிருத்தம்
 

6245.

' "உரை உளது உணர்த்துவது; உணர்ந்து

கோடியேல்,- 

விரை உள அலங்கலாய் ! - வேத வேள்வியின்
கரை உளது; யாவரும் கற்கும் கல்வியின்
பிரை உளது" என்பது மைந்தன் பேசினான்:

  

விரை உள அலங்கலாய் - மணம் கமழும் மாலையணிந்தவனே;
உரை  உளது உணர்த்துவது- உனக்கு நான் உணர்த்தும் வார்த்தை
ஒன்று உள்ளது; உணர்ந்து கோடியேல் - நான் கூறுவதை உணர்ந்து
கொள்வாயேல் (கூறுவேன்);   வேத வேள்வியின் கரை   உளது -
(என்உரை)    வேத   ஞானத்துக்கும்    வேள்வியின்   பலனுக்கும்
முடிவிடமாயுள்ளது; யாவரும் கற்கும்   கல்வியின் பிரை உளது-
எல்லோரும் கற்கின்ற கல்வியாகிய பாலுக்கு பிரை  போன்ற   நிறை
உள்ளது; என்பது மைந்தன் பேசினான்- என்பன போன்றவைகளை
மகனாகிய பிரகலாதன் கூறினான்.
  

விரை - மணம். அலங்கல் - மாலை. பிரை - மோர்த்துளி.
பாலை உறைய வைக்கும் பிரை  போல   யாவரும்   கற்கும்
கல்வியைச் செறிய வைக்கும் உரை உளது. எனது உரையான
எட்டெழுத்து மந்திரம் வேத