பக்கம் எண் :

116யுத்த காண்டம் 

ஞானத்துக்கும், வேள்விப் பயனுக்கும் முடிந்த முடிவான எல்லை
நிலமாயுள்ளது   என்றான்.   வேதம் -   வேதத்தால்   எய்தும்
ஞானம்.  வேள்வி.  வேள்வியால்   எய்தும்பயன்   இவைகளின்
முடிவிடமாயிருப்பது பரமன் திருநாமம் என்பது கருத்து. விறகில்
தீயினன் எனத் தொடங்கும் பாடலில் நன்பாலில் படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்... முறுக வாங்கிக் கடைய
முன் நிற்குமே என வரும் அப்பர் (திருமுறை5-பாட893) வாக்கை
நினைந்து ஒப்பிடலாம்.
 

(57)
 

6246.

' "வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை; வேந்த!

நின்

பித்து இன்றி உணர்தியேல், அளவைப் பெய்குவேன்;
'உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தற்பாற்று'

எனா,

கைத்து ஒன்று நெல்லிஅம் கனியின் காண்டியால்.
 

வேந்த- அரசனே; 'வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை
- விதையில்லாது   விளைவது   எதுவுமில்லை;   பித்து   இன்றி-
(பொருளல்லவற்றைப் பொருள்  என்றுணரும்)   மயக்க   உணர்வை
விட்டு; உணர்தியேல்- (உண்மைப்  பொருளை)   உணர்வாயானால்;
அளவைப் பெய்குவேன்- (மெய்ப்பொருளை அறியும்)   வகையை
விளக்கிக் கூறுவேன்; உய்த்து  - (மெய்ப்பொருளிலே  மனத்தைச்)
செலுத்தி;   ஒன்றும்   ஒழிவுஇன்றி -  சிறிதும்  இடைவிடாமல்;
உணர்தற்பாற்று எனா- உணரத்தக்கது என்று;  கைத்து   ஒன்று
நெல்லி அம் கனியின்
  - உள்ளங்கையில்  கொண்ட   நெல்லிக்
கனியைப்  போல;  காண்டியால்-  (மெய்ப்பொருளை)  காண்பாய்
(என்றான்).
   

எல்லா உயிர்களுக்கும் ஆதார சக்தியாக விளங்கும் பரமனை
அன்றி உலகம் நிலை பெறுதல் இயலாது  என்பதை   'வித்தின்றி
விளைவில்லை' என்ற உவமை கூறி விளக்கினான். பித்து - மருள்
(மயக்க உணர்வு)  அளவு   -   அறியும்   வகை. பெய்குவேன்
-  விளக்கிக் கூறுவேன். ஒழிவின்றி - இடைவிடாமல். 

(58)
  

6247.

' "தன்னுளே உலகங்கள் எவையும் தந்து, அவை -

தன்னுளே நின்று, தான் அவற்றுள் தங்குவான்,

பின் இலன் முன் இலன், ஒருவன்; பேர்கிலன்;
தொல் நிலை ஒருவரால் துணியற்பாலதோ ?
 

ஒருவன்-   ஒப்பற்ற  ஒருவனாகிய   இறைவன்;   தன்னுளே
உலகங்கள் எவையும் தந்து
- எல்லா உலகங்களையும் தன்னுள்ளே