இருந்து தோன்றச் செய்து; அவை தன்னுளே நின்ற- அவ்வுலகங்களுக்குள் அந்தர்யாமியாய் நின்று; தான் அவற்றுள் தங்குவான்- தான் அவைகளுக்குள் எங்கும் நிறைந்து தங்கி இருப்பான்; பின் இலன்- அவனை அன்றிப்பின்னால் எதுவும் எஞ்சி இருப்பது இல்லாதவன்; முன் இலன்- தனக்கு முன்னும் தானன்றி எதுவும் இல்லாதவன்; பேர்கிலன்- தனது நிலையிலிருந்து என்றும் பிறழாதவன்; தொல்நிலை - அப்பரமனுடைய தொன்மையான நிலை; ஒருவரால் துணியற் பாலதோ - இத்தகையதென ஒருவரால் அளவிட்டுக் கூறும் தரத்ததோ. |
தன்னுள் இருந்து உலகையும், உயிரினங்களையும் தோன்றச் செய்கிறான் அவை, தனது விரிவிலே அடங்கி நிற்க - தான் அவைகளுக்குள்ளே எங்கும் நிறைந்து விளங்குகிறான். சரீர. சரீரிபாவம் (உடல் உயிர்க் கொள்கை) என்ற வைணவக் கோட்பாடு இங்கு கூறப்பட்டுள்ளது. சித்து - அசித்துக்களாகிய அனைத்தையும் உடலாக உடையவன் அவற்றின் உயிராகத் திகழ்பவன் என்பதே உடலுயிர்க் கொள்கை என்பர். |
"தன்னுளே திரைத் தெழும்தரங்க வெண் தடங்கடல் தன்னுளே திரைத் தெழுந்தடங்குகின்ற தன்மைபோல் நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும் நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே" |
(திருச்: 10) |
என்ற திருமழிசையாழ்வார் அருளிச் செயல் ஒப்பு நோக்கத்தக்கது. "பரமன், உலகைப் படைக்க வேறு காரணம் வேண்டாது தன்னிடமிருந்தே தோன்றச் செய்கிறான்" என்றதை 'தன்னுளே உலகங்கள் எவையும் தந்து" என்றார். உயிர்கள் வாழத் தான் இடமாய் நின்றும், அவ்வுயிர்களுக்குள் தான் அந்தர் யாமியாய்த் திகழ்பவன்' என்ற அரிய உண்மையைத் தெரிவிக்கிறது," |
(59) |
6248. | ' "சாங்கியம், யோகம் என்று இரண்டு தன்மைய, |
| வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன; |
| ஆங்கு அவை உணர்ந்தவர்க்கு அன்றி, அன்னவன் |
| ஓங்கிய மேல் நிலை உணரற்பாலதோ ? |
| |
சாங்கியம் - ஆராய்ச்சியால்வரும் ஞானம்; யோகம்- ஞானத்தை அனுபவமாகச் செயற்படுத்தும் நிலை; என்று இரண்டு தன்மைய- என்று கூறும் இரண்டு வகை நெறிகள்; வீங்கிய பொருள் எலாம்- நிறைந்துள்ள உலகப் பொருள்களை எல்லாம்; வேறு |