பக்கம் எண் :

118யுத்த காண்டம் 

காண்பன- வேறு படுத்துப்  பகுத்து   உணர்த்துவனவாம்;  ஆங்கு
அவை உணர்ந்தவர்க்கன்றி 
- அவற்றை   அறிந்தவர்க்கல்லாது;
அன்னவன்   ஓங்கிய   மேல்  நிலை- அப்பரமனது உயர்வற
உயர்ந்த  மேலான்  நிலை; உணரற்பாலதோ  -   உணர்ந்தறியும்
தகைமையதோ?
 

மூலப்பகுதிமுதல் புருடன் வரை உள்ள தத்துவங்களின் இயல்பை
விரித்துரைப்பது சாங்கிய நெறி.   இயமம்  முதலிய   எண்  வகைப்
பயிற்சியை மேற்கொண்டு  மனத்தை   நெறி  நிறுத்தி   இறைவனை
உணர்வது யோக நெறி. உலகப்  பொருள்களையெல்லாம்   பகுத்து
உணர்த்தும்   இவ்விருவகை    நெறிகளையும்   உணர்ந்தவர்களே
இறைவனது மேலாம் நிலையை   அறிவர்.   பிறர்  உணர்ந்தறியார்
என்க வீங்கிய - மிகுந்த, அன்னவன்   -   இறைவன்.   பாலதோ
-  ஓகாரம்  எதிர்மறைப்   பொருள்;   உணரற் பாலதல்ல என்பது
கருத்து. சாங்கியம், யோகம் என்ற இருவகை   நெறிகளை அறிந்து
உணர்ந்தவர்களே   இறைவனது    சிறந்த   மேலாம்   நிலையை
உணரவல்லவர் என்பது கருத்து.
 

(60)
 

6249.

' "சித்து என அரு மறைச் சிரத்தின் தேறிய

தத்துவம் அவன்; அது தம்மைத் தாம் உணர்

வித்தகர் அறிகுவர்; வேறு வேறு உணர்

பித்தரும் உளர் சிலர்; வீடு பெற்றிலார்.
 

அருமறைச் சிரத்தின்  - அரிய  வேதங்களின்  உச்சியிலே
அமைந்த;   சித்தெனத்   தேறிய-   மெய்ப்பொருள்   எனத்
தெளிந்துரைத்த; தத்துவம் அவன்- பரதத்துவமாக விளங்குபவன்
அவன்; அது தம்மைத்தாம் உணர்  வித்தகர்   அறிகுவர்-
அதனை,  தங்களைத்   தாங்கள்   உணர்ந்த  ஞானிகள்   நன்கு
அறிவார்கள்;  வேறு   வேறு   உணர் பித்தரும் உளர் சிலர்
- இவ்வாறன்றி  வேறுவேறாக பிறழ உணரும்  பித்தர்களும் சிலர்
உள்ளனர்;  வீடு  பெற்றிலார்  -   ஞானிகளும்   யோகிகளும்
அடையத்தக்க வீடு பேறான பரமபதப்பேற்றைப் பெறாதவராவர்.
 

'அருமறை' என்னாது அரிய நெறியைக் கூறும் வேதம். 'சித்து'
என்றது மெய்ப்பொருளான பரம்   பொருளை.   அருமறைச்சிரம்
வேதங்களின் உச்சி; வேதக் கருத்துகளை  விளக்கும்  உபநிடதம்.
பித்தர். மயக்க உணர்வுடையோர். "மறையாய நால்வேதத்துள்நின்ற
மலர்ச்சுடரே" என்ற திருவாய் மொழி (2313) ஒப்பு நோக்கத்தக்கது.
 

(61)
 

6250.

' "அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப்

புறத்து

உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ;