| கிளவி ஆர் பொருள்களான் கிளக்குறாதவன் |
| களவை யார் அறிகுவார் ? மெய்ம்மை கண்டிலார். |
| |
|
அளவை - பொருள்களை அளந்து துணிவதற்குரிய அடிப்படைப் பிரமாணங்கள். உளவை - உள்ளவரை. 'சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து" (திருக்குறள் - உரைப்பாயிரம்) எனப்பரிமேலழகரும், "மொழியைக் கடக்கும் பெரும்புகழான்" எனத் திருவரங்கத் தமுதனாரும் (இராமானுச நூற்றந்தாதி 7) கூறியவை ஒப்பு நோக்கத் தக்கன. கனவு இங்கு மாயம். பரமனின் திறங்களை இக்காண்டத்தில், நாகபாசப் படலத்தில் கருடன் துதியாக வரும் பாடல்களில் (8252 8262) அற்புதமாகக் கம்பர் விளக்கியுள்ளார். |
(62) |
| 6251. | ' "மூவகை உலகும் ஆய், குணங்கள் மூன்றும் ஆய் |
| யாவையும் எவரும் ஆய், எண் இல் வேறுபட்டு, |
| ஓவல்இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை |
| தேவரும் முனிவரும்உணரத் தேயுமோ ? |
| |
மூவகை உலகும் ஆய் - மேல், கீழ், இடை என்ற மூன்று வகையான உலகங்களும்தான் ஒருவனே ஆகி; குணங்கள் மூன்றும் ஆய்- சத்துவம், இராஜசம், தாமசம் என்னும் மூன்று வகையான குணங்களாகவும் ஆகி; யாவையும் எவரும் ஆய் - உலகப் பொருள்கள் எல்லாமும் எல்லோரும் தானே ஆகி; எண்ணில் வேறுபட்டு - எண்ணற்ற வேறுபாடுகளுடன் தோன்றியும்; ஓவலில் ஒரு நிலை ஒருவன்- நீங்குதலில்லாத ஒரே நிலையை உடைய ஒருவன்(இறைவன்); செய்வினை - செய்தருளும் செயல்கள்; தேவரும் முனிவரும் உணர - தேவர்களும், முனிவர்களும் உணருமாறு; தேயுமோ- அளவில் சுருங்கியதாய் விடுமோ? ஆகாது. |