மூவகை உலகு - உலகிலுள்ள அவன், அவள், அது என்று சுட்டத்தகுந்த மூன்று வகையினதாகிய உயிரினங்கள் எனினுமாம். அந்த உயிரினங்களுக்குரிய சத்துவ குணம், ரஜோகுணம், தாமசகுணம் யாவையும் சித்து, அசித்துப் பொருள்கள் எல்லாம். யாவரும். எல்லோரும். எண்ணற்ற வேறுபாடுள்ளவன். அதே சமயத்தில் நீக்கமில்லாத ஒரே நிலையை உடையவன் என்பதை, "ஓவலில் ஒருநிலை ஒருவன்" என்றார். |
(63) |
6252. | ' "கருமமும், கருமத்தின் பயனும், கண்ணிய |
| தரு முதல் தலைவனும், தானும், தான்; அவன் |
| அருமையும் பெருமையும் அறிவரேல் அவர், |
| இருமை என்று உரைசெயும் கடல்நின்று ஏறுவார். |
| |
கருமமும் - நல்வினை, தீவினை ஆகிய இருவகை வினைகளும்; கருமத்தின் பயனும் - அந்த வினைகளால் நேரும் பயனும்; கண்ணிய தரு முதல் தலைவனும் - விரும்பிய அப்பயன்களை உயிர்களுக்குத் தரும் முதற் பொருளும்; தானும் - வினைசெய்யும் கருத்தாவாகிய உயிரும்; தான்- அனைத்தும் தானாக விளங்குபவன் இறைவனே; அவன் அருமையும் பெருமையும் - அவ்விறைவனது அருமை பெருமைகளை; அறிவரேல் அவர்- யார் அறிய வல்லவரோ, அவர்கள்; இருமை என்றுரை செயும்- இம்மை, மறுமைகளாகிய இருமை என்று நூல்கள் கூறும்; கடல் நின்று ஏறுவார் - பெருங்கடலைக் கடந்து கரை சேர்பவராவர். |
'கருமமும் கரும் பலனுமாகிய காரணன்' என்பது திருவாய்மொழி (3:5:10) "செய்வினையும் செய்வானும் அதன் பலனும் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே இவ்வியல்பு சைவநெறி என்ற பெரிய புராணப் பாடல் (3645) ஒப்பிடத்தக்கது. |
(64) |
6253. | ' "மந்திரம் மா தவம் என்னும் மாலைய, |
| தந்துறு பயன் இவை, முறையின் சாற்றிய |
| நந்தல் இல் தெய்வம் ஆய், நல்கும் நான்மறை |
| அந்தம் இல் வேள்விமாட்டு அவிசும் ஆம்-அவன். |
| |
மந்திரம் - அப்பரமனைத் தியானிப்பதற்குரிய மந்திரங்களும்; மாதவம்- வேத மந்திரங்களால் செய்யப்படும் சிறந்த தவமும்; என்னும் மாலைய - என்னும் இயல்புடைய (நற |