பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 121

செயல்களும்); தந்து உறு பலன்  இவை  -  அச்செயல்கள்  தரும்
சிறந்த பயன்களும்; முறையின் சாற்றிய-   இவற்றை   முறைப்பட
அருளிய; நந்தல் இல் தெய்வமாய்  நல்கும்   -   குறையில்லாத
தெய்வம்   ஆகியும்   வழங்குவான்;   நான்  மறை   அந்தமில்
வேள்விமாட்டு
- நான்கு வேதங்களும்   விதித்தபடி   குறைவின்றிச்
செய்யும் யாகத்திலே பெய்யும்; அவிசும் ஆம்   அவன் -  தேவர்
உணவான அவி உணவும் அவனே ஆவான்.
 

(65)
 

6254.

' "முற்பயப் பயன் தரும், முன்னில் நின்றவர்,

பிற்பயப் பயன் தரும், பின்பு போல் அவன்;

தற் பயன் தான் தெரி தருமம் இல்லை; அஃது

அற்புத மாயையால் அறிகிலார் பலர்.
 

முற்பயப்   பயன்தரும்  -     (அப்பரமன்)      முன்னே
அனுபவிப்பதற்குரிய முதிர்ந்த வினைப்பயனைமுன்னின்று தவுவான்;
முன்னில் நின்று- ஆசிரிதர்களான அடியவர்க்கு முன்   நின்று;
அவர் பிற்பயப் பயன் தரும்- அவர்கள் பின்னே நுகர்தற்குரிய
முதிராத வினைப் பயன்களை பின்னர் உதவுவான்;  பின்பு போல்
அவன்
- பின்னே   இருப்பது   போலிருந்து   அப்பரமனுதவும்;
தற்பயன்தான் தெரி
- தனது பயனைத் தானே தெரிந்து தரவல்ல;
தருமம்   இல்லை
  -     கருமம்    எதுவுமில்லை;   அஃது
அற்புதமாயையால்
-  அதனை அவனது அற்புத மாயையாலே;
அறிகிலார் பலர்- பலர் அறிய முடியாதவராவர்.
 

உயிர்கள்     அனுபவிப்பதற்குரிய     முற்பயனைமுன்னும்,
பிற்பயனைப் பின்னும் துய்க்கச் செய்பவன் இறைவன் ஒருவனே
சடப் பொருளான வினை தானே பயன்தர வல்லதல்ல என்றான்.
செய்வினைப் பயன் தானே பயன் தரும்.  அதைச் செய்ய ஒரு
தெய்வம் வேண்டியதில்லை. என்று கூறிய இரணியன் உரையை
மறுத்துப் பிரகலாதன் கூறுவதிதுவென்க.   தருமம் -   செயல்
(கருமம்) 
 

(66)
 

6255.

' "ஒரு வினை, ஒரு பயன் அன்றி உய்க்குமோ,

இரு வினை என்பவை இயற்றி இட்டவை;

கருதின கருதின காட்டுகின்றது,

தரு பரன் அருள்; இனிச் சான்று வேண்டுமோ ?
 

இருவினை என்பவை- உயிர்கள் செய்த  நல்வினையும்
தீவினையும் ஆகிய இருவகை வினைகள் என்பவை; இயற்றி