பக்கம் எண் :

122யுத்த காண்டம் 

இட்டவை - உயிர்கள் செய்து வைத்தனவாகும்;   (அவற்றுள்)   ஒரு
வினை ஒரு பயன் அன்றி
- ஒரு வினை ஒரு பயனைத் தருவதல்லது;
உய்க்குமோ- வேறு பயன்களைத் தரவல்லவையோ; கருதின கருதின
காட்டுகின்றது
- அடியார்கள்   விரும்பிய  விரும்பிய   பலன்களைத்
தரவல்லது;   தருபரன்   அருள்-  எல்லாம்   தரவல்ல   இறைவன்
திருவருளே; இனிச் சான்று வேண்டுமோ  -   இனி இதற்கு   வேறு
சாட்சியும் வேண்டுமோ ?
 

'வேள்வியும் தவமுமாகிய நல்வினை இயற்றி உலக   முதல்வனாக
இருக்கிறேன்' என்று கூறிய இரணியனுக்கு,  செய்யும்   நல்வினையோ
தீவினையோ தாமே   பயன்தரவல்லன அல்ல. அவை  உயிரற்ற சடப்
பொருள்தானே எவ்வாறு பலன் தரும்; அடியார்   கருதிய அத்தனைப்
பயன்களையும் தரவல்லது இறைவன் திருவருளே என்றுணர்க என்றான்
பிரகலாதன். உய்க்குமோ - செலுத்துமோ 
 

(67)
 

6256.

' "ஓர் ஆவுதி, கடைமுறை வேள்வி ஓம்புவார்,

அரா-அணை அமலனுக்கு அளிப்பரேல்; அது

சராசரம் அனைத்தினும் சாரும் - என்பது

பராவ அரு மறைப் பொருள்; பயனும் அன்னதால்.
 

வேள்வி ஓம்புவார் கடைமுறை- வேத வேள்விகளைச் செய்து
முடிப்பவர்கள்   வேள்வியின்   முடிவில்;   ஒரு ஆவுதி  -   ஓர்
அவியுணவினை;   அராஅணை     -   பாம்பணையில்  அறிதுயில்
அமர்ந்திருக்கும்; அமலனுக்கு   அளிப்பரேல்  - திருமாலுக்குப்
படைப்பாராயின்; அது சராசரம் அனைத்திலும் சாரும்-  அந்த
அவியுணவு உலகில் உள்ள சரம், அசரம் ஆகிய  எல்லாவற்றையும்
அடையும்;  என்பது பராவ அரும்மறைப் பொருள் -   என்பது
பரவுதற்கு   அரிய பெருமைமிக்க 'வேதங்கள் கூறும் பொருளாகும்;
பயனும் அன்னதால்- அவியுணவே அல்லாது அந்த வேள்வியின்
பயனும் அத்தன்மைத்தே யாகும்.
  

அமலன் - குற்றமற்றவன் "வேதமும் வேள்வியும் விண்ணும் 
இரு சுடரும் ஆதியும்   ஆனான்"   என்ற   பெரியதிருமொழி
(நாலாயிர.1786) ஒப்பு நோக்கத்தக்கது.
 

(68)
 

6257.

' "பகுதியின் உட் பயன் பயந்தது; அன்னதின்

 

விகுதியின் மிகுதிகள் எவையும், மேலவர்

வகுதியின் வசத்தன; வரவு போக்கது;

புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ ?