|
பகுதி - மூலப் பிரகிருதி; அழிவில்லாதது, அளவற்றது; முக்குணமுடையது; உலகுக்கு முதற்காரணமானது; தோற்றமும் அழிவும் இல்லாதது. பரமன் திருவிளையாட்டுக்குக் கருவியாய் விளங்குவது மூலப் பிரகிருதி. இதனைப் பரிபாடல் தொண்டு என்னும். இந்த மூலப்பிரகிருதியிலிருந்து "மான்" முதலான தத்துவங்கள் தோன்றும் இதிலிருந்து பலவாய் விரிந்து தோன்றும் பொருள்கள் 'விகுதி' எனப்படும். விகுதி-வகை மூலப்பகுதியாகிய தத்துவம் உலகுக்குக் காரணமாய் - தன்னில் விரிந்த இருபத்துநான்கு தத்துவமாய் - திருமாலுக்கு உடலாய் விளங்கும் என்ற சரீர - சரீரிபாவம் வைணவ சமயத்தின் அடிப்படைக் கொள்கையாகும். வேதாந்தம், சைவசித்தாந்தம் போன்ற பிற தத்துவங்களும் இக்கருத்துடையனவே. ஐயரவர்கள் நூலகப் பதிப்பில் விரிவு காணலாம். பிரமன் இராமனை நோக்கிக் கூறும், |
"பகுதிஎன்றுளது யாதினும் பழையது பயந்த விகுதியால் வந்த விளைவு மற்று அதற்கு மேல்நின்ற புகுதி யாவர்க்கும் அரிய அப்புருடனும் நீ இம் மிகுதி உன்பெரு மாயையினால் வந்த வீக்கம்" |
என்ற பாடல் (10051) ஒப்பு நோக்கத்தக்கது. |
(69) |
6258. | ' "எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை,- |
| முழுத் தனி நான்முகன் முதல முற்று உயிர்- |
| வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால், |
| விழுத் தனிப் பல் இதழ் விரை இலா முகிழ். |
| |
எழுத்து இயல் நாளத்தின்- ஓவியத்தின் தன்மைவாய்ந்த அழகிய தண்டினையும்; விழுத்தனிப்பல் இதழ் - மேலான சிறந்த பல இதழ்களையும்; விரை இலா முகிழ் - உடைய திருமாலின் நாபியில் தோன்றிய மணம் கமழும் தாமரை மலரின்; முழுத்தனி |