ஒரு பொருட்கே - (பரம் பொருளான) ஒப்பற்ற ஒரு பொருளுக்கே; பேரை பல்வகையால் - அரன், அரி, அயன் என்னும் பலவகையான பெயர்களை; பேர்த்து எண்ணும் - மாற்றி வழங்குகின்ற; தாமரை நிலையை - ஒழுங்கான நிலையை உடையவனாவாய்; தமியை; பிறர் இல்லை- நீ ஒப்பற்ற தனியனாய் உள்ளாய்; எல்லாம் நீயாதலின் உன்னையன்றிப் பிறர் இல்லை; யாரைப் படைக்கின்றது யாரை அளிக்கின்றது யாரைத் துடைக்கின்றது ஐயா அறியேமால்- உனக்கு வேறாக நீ யாரைப் படைப்பது ? யாரைக் காப்பது ? யாரை அழிப்பது ! இறைவனே உனது மேலான தன்மை ஒன்றும் நாங்கள் அறிய மாட்டோம். |
தாரை நிலை - ஒழுங்கான நிலை. பரம்பொருளாகிய நீயே படைத்தல் முதலிய முத்தொழில் காரணமாக அயன் முதலான பெயர்களைக் கொண்டு விளங்கினாலும் அவை மூன்றும் உன்னுடைய தோற்றமே என்பதனை, 'பேரை ஒரு பொருட்கே பல்வகையால் பேர்த்தெண்ணும் தாரை நிலை' என்றார். "ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்; ஆதிக் கமலத் தலர் மிசையானும், சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று" என்ற திருமந்திரம் (104) ஒப்பு நோக்கத் தக்கது. உயர்வற உயர்நலமுடைய உனது அலகிலா விளையாடல்களைத் தெரிந்துணரும் தகுதியுடையே மல்லேம் என்பார் "அறியேம்" என்றார். "ஆக்குமாறு அயனாம் முதல் ஆக்கிய உலகம் காக்குமாறு செங்கண் இறை கருணையங்கடலாம் வீக்குமாறு அரனாம் அவை வீந்த நாள் மீளப் பூக்கும் மாமுதல் எவன்? அவன் பொன்னடி போற்றி" என்ற வில்லி பாரதக் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒப்பிட்டுணரத் தக்கது. |
(159) |
6348. | ' "நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால், |
| என்னுளே, எப் பொருளும் யாவரையும் யான் |
| ஈன்றேன்; |
| பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே ! |
| பொன்னுளே தோன்றியது ஓர் பொற்கலனே |
| போல்கின்றேன்.' |
|
நின்னுளே - உனக்குள் இருந்து; என்னை நிருமித்தாய் - நீ என்னைத் தோன்றச் செய்தாய்; நின் அருளால் - உனது திருவருள் துணையால்; என்னுளே எப்பொருளும் - எனக்குள் இருந்து (அசித்) உயிரற்ற பொருள்களையும்; யாவரையும் யான்என்றேன்- உயிருள்ள (சித்) பொருள்களையும் யான் படைத்தேன்; பின்இலேன் முன் இலேன் - எனக்கென்று தனியான காரண, காரியம் எதுவுமில்லை; |