பக்கம் எண் :

182யுத்த காண்டம் 

எந்தை   பெருமானே    -   எமக்கெல்லாம்   தந்தையான
எம்பெருமானே; பொன்னுளே தோன்றியதோர் பொற்கலனே
போல்கின்றேன்
  -    உன்னிலிருந்து     தோன்றி    நான்;
பொன்னிலிருந்து தோன்றிய பொற்கலன் போன்றவனாவேன்.
 

இறைவனுக்கும்   உயிர்களுக்கும்   இடையே   அமைந்த
தொடர்பு    பொன்னுக்கும்,     அதனால்     செய்யப்பட்டு
அப்பொன்னினும் வேறாகாத அணி  கலனுக்கும்  இடையுள்ள
சம்பந்தம் போன்றது. இதனை "அபேத சம்பந்தம்" எனச் சமய
நூல்கள்  கூறும்  இப்பாடலின்  கடைசி  இரண்டடிகள்  இந்த
உண்மையைக் கூறுவதாம். பின் - காரியம் முன் - காரணம்.
 

உன்னையல்லாது  எனக்கு  ஆதியும்  வேறில்லை.  நான்
சென்றடையும் அந்தமும் வேறில்லை  என்பார் 'முன்  இலேன்
பின்இலேன்' என்றார் என்று கூறினும் அமையும்,
 

(160)
 

சிங்கப்பிரான் சீற்றம் தணிந்து தேவர்களுக்கு அபயம் அளித்தல்
 

6349.

'என்று ஆங்கு இயம்பி, இமையாத எண்கணனும்,

வன் தாள் மழுவோனும், யாரும், வணங்கினரால்

நின்றார், இரு மருங்கும்; நேமிப் பெருமானும்,

ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான்.
 

என்று ஆங்கு இயம்பி - என்றெல்லாம்  பலவாறு கூறித்
துதித்து;    இமையாத    எண்கணனும்    -   இமைக்காத
எட்டுக்கண்களை  உடையவனான  பிரமதேவனும்; வன்தாள்
மழுவோனும்
-  வலிய  போர்த்  தொழில்  வல்ல  மழுவை
ஆயுதமாக  உடைய   சிவபிரானும்;  யாரும்  வணங்கினர்-
மற்றுமுள்ள  தேவர்கள்   எல்லோரும்  நரசிங்க  மூர்த்தியை
வணங்கினார்கள்;      இரு      மருங்கும்     நின்றார்-
அப்பெருமானுக்கு இருபுறங்களிலும் வந்து குழுமி நின்றார்கள்;
நேமிப்   பெருமானும்   -    சக்கராயுதத்தை    உடைய
எம்பெருமானும்;  ஒன்றாத  சீற்றத்தை-  தன்   இயல்புக்கு
ஒவ்வாத    பெருஞ்சினத்தை;   உள்ளே   ஒடுக்கினான்-
தனக்குள்ளே ஒடுங்குமாறு செய்தருளினான்.
 

தேவர்கள் இமையாநாட்டம் உடையவராதலின்  'இமையாத
எண்கணன்'  என்றார். எண்கண்ணன் -  பிரமன்.  கருணையே
இறைவனது இயல்பு.  அப்பெருமானது  இயல்புக்குச்   சிறிதும்
ஒவ்வாதது சினமாதலின் 'ஒன்றாத சீற்றம்'
என்றார்.
 

(161)