6350. | "எஞ்சும், உலகு அனைத்தும் இப்பொழுதே" என்று |
| என்று, |
| நெஞ்சு நடுங்கும் நெடுந் தேவரை நோக்கி, |
| "அஞ்சன்மின்" என்னா, அருள் சுரந்த நோக்கினால், |
| கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான். |
|
உலகு அனைத்தும் இப்பொழுதே எஞ்சும் - (நரசிங்கப்பிரானுடைய சீற்றத்தால் எல்லா உலகங்களும் இப்பொழுதே அழிந்து சிதையும்; என்றென்று நெஞ்சு நடுங்கும்நெடுந்தேவரை நோக்கி- என்றெண்ணி அச்சத்தால் மனம் நடுங்க நின்ற தேவர்களைப் பார்த்து; அஞ்சன்மின் என்னா- (நரசிங்கப்பிரான்) அஞ்சாதீர்கள் என்றுகூறி; அருள் சுரந்தநோக்கினால் - கருணை நிறைந்து பொங்கும் அருள் நோக்குடனே; கஞ்ச மலர் பழிக்கும்கை- தாமரை மலரையும் பழிக்கும்படியான அழகிய கையால்; அபயம் காட்டினான்- அபயக் குறிப்பைக் காட்டியருளினான். |
எஞ்சுதல் - குறைதல் (சிதைதல்). " அருள் சுரந்த நோக்கினால் அஞ்சன்மின் என்னா - கை அபயம் காட்டினான்" என இயையும். கஞ்சம் - தாமரை. தாமரைமலரை வென்று நிற்கும் அழகிய கையை "கஞ்சமலர் பழிக்கும் கை" என்றார். |
(162) |
திருமகள் வருதலும் சிங்கப்பிரான் நோக்குதலும் |
6351. | 'பூவில் திருவை, அழகின் புனை கலத்தை, |
| யாவர்க்கும் செல்வத்தை, வீடு என்னும் இன்பத்தை, |
| ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை, |
| தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல. |
|
பூவில் திருவை- செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளை; அழகின் புனைகலத்தை- அழகு (தனக்கு மேலும் அழகு வேண்டி) அணியும் அணிகலன் போன்றவளை; யாவர்க்கும் செல்வத்தை - எல்லோருக்கும் செல்வத்தை வழங்கும் செல்வியாகத் திகழ்பவளை; வீடு என்னும் இன்பத்தை - பரமபதம் என்ற பேரின்ப வீட்டைத் தந்தருள்பவளை; ஆவித்துணையை - திருமாலின் உயிர்த்துணையாகப் பிரியாது இருப்பவளை; அமுதில் பிறந்தாளை- அமுதம் பிறந்த பாற்கடலில் பிறந்தவளை; தேவர்க்கும் தம் மோயை- தேவர்களுக் கெல்லாம் தாயாக விளங்குபவளை; பாற் செல்லஏவினார் - (சீற்றம் கொண்டு நின்ற |