சிங்கப்பிரான்) பக்கத்திலே சென்றருளப் பிரார்த்தித்து (பிரமன் முதலான தேவர்) அனுப்பினர். |
பூ - தாமரைப் பூ: பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே என்றபடி. திரு. திருமகள். அணிகலம் போன்றவள் பிராட்டி என்பார் "அழகின் புனைகலத்தை" என்றார். செல்வத்துக்கு உரிமை பூண்டுள்ள அதிதேவதை திருமகளே யாதலின் "யாவர்க்கும் செல்வத்தை" என்றார் உயிர்களுக்குப் பேரின்ப வீட்டை அருள்பவளும் பெரிய பிராட்டியே ஆதலின் 'வீடு என்னும் இன்பத்தை" என்றார் 'அகலகில்லேன்' எனப்பரமனை விட்டு நீங்காது உடன் உறைபவள் என்பதால் "ஆவித்துணையை" என்றார். 'தேவர்க்கும்' என்ற உம்மை மற்றுமுள்ள எல்லோர்க்கும் என்ற பொருள் தந்து நின்ற எச்சவும்மை, மோய் - தாய் |
(163) |
6352. | 'செந் தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் |
| நந்தா விளக்கை, நறுந் தாள் இளங் கொழுந்தை, |
| முந்தா உலகும் உயிரும் முறை முறையே |
| தந்தாளை, நோக்கினான், தன் ஒப்பு ஒன்று |
| இல்லாதான். |
|
தன் ஒப்பு ஒன்று இல்லாதான் - தனக்கு உவமையில்லாத தனித் தலைவனாகிய எம்பெருமான்; செந்தாமரைப் பொகுட்டில் - செம்மை நிறமுடைய தாமரை மலரின் நடுவே; செம்மாந்து வீற்றிருக்கும் - மனமகிழ்வோடு அமர்ந்தருளும்; நந்தா விளக்கை - தூண்டாத விளக்குப் போன்றவளை; நறுந்தாள் இளங்கொழுந்தை- நறுமணம்கமழும் காம்போடு கூடிய இளங்கொழுந்து போன்றவளை; முந்தா உலகும் உயிரும் - இவ்வுலகையும் உயிர்களையும்; முறை முறையே தந்தாளை- வழி வழியாகத் தந்தருள்பவளை; நோக்கினான் - (கருணை நிறைந்த கண்களால்) பார்த்தருளினான். |
ஒப்பு - நிகர், தனக்கு வேறு எவரும் நிகரில்லாத தனிப் பெரும் தலைவனாகத் திகழ்பவன் திருமால் என்பதால் 'தன்' ஒப்பு ஒன்றில்லாதான்" என்றார். பொகுட்டு தாமரை மலரின் மையத்திலிருக்கும் கொட்டை. செம்மாந்து - மனம் மகிழ்ந்து (செம்மாப்பு - கம்பீரம் எனினுமாம்) நறும்தாள் - நறுமணம் கமழும் கொம்பு. இளங்கொழுந்து - இளந்தளிர் முந்தா- முந்திய (முற்பட) முறை முறையே-வழிவழியாகத் தொடர்ந்து., திருமாலை விட்டுப் பிரியாது - |