உந்தையை உன்முன் கொன்று - (சிங்கப்பிரான் பிரகலாதனை நோக்கி) உனது தந்தையான இரணியனை உன்கண் எதிரே கொன்று; உடலைப் பிளந்து அளைய- அவனுடலை எனது கை நகங்களால் பிளந்து துழாவவும்; சிந்தை தளராது - சிறிதும் மனம் தளராமல்; அறம் பிழையாச் செய்கையாய் - அற நெறியில் நின்று தவறாத செயலை உடையவனே !; அந்தமிலா அன்பு என்மேல் வைத்தாய்- என்மீது முடிவில்லாத பேரன்புடையனாயிருந்தாய்; அளியத்தாய் - எனது ரட்சகத்துக்கு உரியவனே; எந்தை - என் அப்பனே; இனி இதற்குக் கைம்மாறுயாது என்றான் - என்பால் பேரன்பு பூண்ட உனக்கு செய்யக்கூடிய கைம்மாறு ஏது? என்று கூறியருளினான். |
அளைதல் - துழாவுதல் (கலக்குதல்) அறம் பிழையா - அறத்திலிருந்து பிசகாத. அளியத்தாய் - கருணை செய்யத்தக்கவன் (ரட்சிக்கத்தக்கவன்). பகவானுக்குக் கைம்மாறு செய்ய இயலாமை பக்தர்க்கு இயல்பு. இங்கு நேர்மாறாகப் பக்தனுக்குக் கைம்மாறு செய்ய இயலாமை குறித்துப் பகவான் இரங்குகிறான். பாகவத தர்மம் இது. |
(166) |
6355. | ' "அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட |
| செயிரின் ஒரு பொழுதில், நுந்தையை யாம் சீறி, |
| உயிர் நேடுவேம்போல், உடல் அளைய, கண்டும் |
| செயிர் சேரா உள்ளத்தாய்க்கு, என் இனி யாம் |
| செய்கேம் ? |
|
இமைப்பினை அயிரா ஓர் ஆயிரம் கூறிட்ட - கண்ணிமைப் பொழுதை மிக நுண்ணியதாக ஆயிரம் கூறுசெய்த; செயிரின் ஒரு பொழுதில்- சிறிய பகுதியான அச்சிறிய நேரத்துக்குள்; நுந்தையை யாம் சீறி - உனது தந்தையான இரணியனை நான் சினம் கொண்டு; உயிர் நேடுவேம் போல் - கை நகங்களால் உடலைப் பிளந்து உயிர் இருக்குமிடத்தைத் தேடுவது போல; உடல் அளைய- உடல் முழுதும் துழாவுவதை; கண்டும் செயிர்சேரா- நேரில் பார்த்தும் என் மீது சிறிதும் பகைமை பாராட்டாத; உள்ளத்தாய்க்கு- பேரன்பு கொண்ட உள்ளத்தை உடையவனாயிருந்த உனக்கு; என்இனியாம் செய்கேம்- நான் என்ன கைம்மாறு செய்வேன்! |
இமைப்பு - கண்ணை மூடித்திறக்கும் நேரம். அயிரா - நுண்ணிய. செயிர் - குறை. உன் தந்தையின் உடலைப் பிளந்து, அளைந்த போதும் |