பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 187

என்னிடம் சிறிதும் பகை உணர்வின்றி, பேரன்பு கொண்டிருந்த
மனத்தை  உடையவனான  உனக்கு நான்  என்ன  கைம்மாறு
செய்வேன் என்றான்.
 

(167)
 

6356.

' "கொல்லேம், இனி உன் குலத்தோரை, குற்றங்கள்

எல்லை இலாதன செய்தாரே என்றாலும்;

நல்லேம், உனக்கு எம்மை; நாணாமல், நாம் செய்வது

ஒல்லை உளதேல், இயம்புதியால்" என்று உரைத்தான்.
 

இனி உன் குலத்தோரை - இனி  மேல்  உனது  அசுரர்
குலத்தே   பிறந்தவர்களை;  குற்றங்கள்  எல்லை  இலாதன
செய்தாரே
என்றாலும்- அவர்கள் அளவில்லாத குற்றங்களைச்
செய்தவர்கள் என்று தெரிந்தாலும்; கொல்லேம் - அவர்களைக்
கொல்ல மாட்டேன்; உனக்கு  எம்மை  நல்லேம் -  உனக்கு
எந்தப் பிறப்பிலும் நல்லவனாவேன்;  நாம் செய்வது  ஒல்லை
உளதேல்
-   நான்  உனக்கு   ஏதேனும்   விரைந்து   செய்ய
வேண்டியது     இருந்தால்;     நாணாமல்-    நாணப்படாது;
இயம்புதியால்என்றுரைத்தான்- கூறுவாயாக  என்று  பரமன்
பணித்தான்.
 

எல்லை இலாதன - அளவற்றவை. எம்மை - எப்பிறப்பிலும்.
 

(168)
 

பிரகலாதன் கேட்ட வரமும் சிங்கப் பெருமான் அருளும்
 

6357.

' "முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை;

பின்பு பெறும் பேறும் உண்டோ ? பெறுகுவெனேல்,

என்பு பெறாத இழி பிறவி எய்தினும், நின்

அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்" என்றான்.
 

முன்பு  பெறப்  பெற்ற -   எம்பெருமானே !   உனக்கு
அடியவனாகி யான் முன்பு பெற்றதாகிய; பேறோ முடிவில்லை-
பேறுகளுக்கு  எல்லையே  இல்லை; பின்பு  பெறும் பேறும்
உண்டோ
- இனி மேலும்  நான்  பெற  வேண்டிய  பேறுகள்
ஏதேனும் உண்டோ;  பெறுகுவெனேல் -  அப்படி  ஏதேனும்
வேண்டிப் பெறுவதென்றால்;  என்பு  பெறாத  இழி  பிறவி
எய்தினும்
-  எலும்பில்லாத  இழிந்த  புழுவாகப்  பிறந்தேன்
என்றாலும்; நின் அன்பு  பெறும் பேறு-  உனது  அன்பைப்
பெற்று வாழும் பெரிய