பேற்றினை; அடியேற்கு அருள் - உனது தொண்டனாகிய எனக்கு அருள்வாயாக என்றான். |
"என் பொழி யாக்கையுள் சேர்ப்பினும் அன்பொழியாமை அருள் மதி எனக்கே" என்ற திருவரங்கக்கலம்பகம் (1) ஒப்பு நோக்கத்தக்கது "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்". என்பதை ஒப்பிடுக. |
(169) |
6358. | 'அன்னானை நோக்கி, அருள் சுரந்த நெஞ்சினன் |
| ஆய், |
| "என் ஆனை வல்லன்" என மகிழ்ந்த பேர் ஈசன், |
| "முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும், |
| உன் நாள் உலவாய், நீ, என் போல் உளை" என்றான். |
|
அன்னானை நோக்கி - 'நின் அன்பு பெறும் பேறு அருள்' என்ற அத்தகைய பிரகலாதனை இறைவன் பார்த்து; அருள் சுரந்த நெஞ்சினனாய் - அருள் பொழியும் மனத்தை உடையவனாய்; என்ஆனை வல்லன்- என்னப்பன் மிகவும் வல்லமை உள்ளவன்; என மகிழ்ந்த பேரீசன் - என்று கூறி, மனம் மகிழ்ந்த பெரிய பெருமாள்; முன் ஆன பூதங்கள் - எல்லாவற்றுக்கும் முன்னதாக என்னால் படைக்கப்பட்ட மண் முதலான பூதங்கள்; யாவையும் முற்றிடினும்- எல்லாம் அழிந்துபட்டாலும்; உன்நாள் உலவாய்நீ - உனது வாழ்நாள் என்றும் நீ கெட மாட்டாய்; என்போல் உளை என்றான்- என்னைப் போல நீயும் என்றும் உள்ளவனாவாய் என்றான். |
'ஈசன், அன்னானை நோக்கி உன் நாள் உலவாய் என் போல் உளை என்றான்' என இயையும். 'அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்' என வேண்டிய பிரகலாதனுடைய பக்திப் பெருமையை அறிந்த பரமன் அவனைப் பாராட்டி 'என் ஆனைவல்லன்' என்றான். 'ஆனை' என்பது அருமை பாராட்டிக் கூறுவதோர் சொல் என்பர். ஐம்பெரும் பூதங்கள் மிகப் பழமையானவையாய் எவற்றுக்கும் மூலம் என்பதால் 'முன் ஆன பூதங்கள்' என்றார். உன் நாள் - உனக்குரிய வாழ் நாள். |
(170) |
6359. | ' "மின்னைத் தொழு வளைத்தது என்ன மிளிர் |
| ஒளியாய்! |
| முன்னைத் தொழும்புக்கே ஆம் அன்றோ, மூஉலகும் ? |
| என்னைத் தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி, |
| உன்னைத் தொழுது ஏத்தி, உய்க, உலகு எல்லாம். |