மின்னைத் தொழு வளைத்ததென்ன - தோன்றி உடன் மறையும் மின்னலைத் தொழு மரத்தில் பிடித்து அகப்படுத்தி வைத்ததைப் போல; மிளிர் ஒளியாய் - ஒளிவிட்டு விளங்கும் உடலை உடையவனே; முன்னைத் தொழும்புக்கே- முன்பு நீ கொண்ட அடித் தொண்டுக்கே; மூவுலகும் ஆம் அன்றோ - உனக்கு மூன்று உலகங்களும் உரியதாகும் அல்லவா?; உலகு எல்லாம்- உலகில் உள்ளவர்கள் எல்லோரும்; என்னைத் தொழுது ஏத்தி - என்னை வணங்கித் துதித்து; எய்தும் பயன் - அடையும் எல்லாப் பயன்களையும்; உன்னைத் தொழுது ஏத்தி- உன்னை வணங்கித் துதித்து; எய்தி உய்க- அடைந்து உய்வு பெறுவார்கள் (என்றார்). |
(171) |
6360. | ' "ஏனவர்க்கு வேண்டின், எளிது ஒன்றோ ?-எற்கு |
| அன்பர் |
| ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார்; |
| தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ ? |
| வானவர்க்கும் நீயே இறை-தொல் மறை வல்லோய் ! |
|
தொல் மறை வல்லோய்- பழமையான வேதங்களை எல்லாம் ஓதாதுணர்ந்த வித்தகனே; எற்கு அன்பர் ஆன வர்க்கம் எல்லாம்- எனக்கு அடியவர்களாக இருக்கும் அன்பர் கூட்ட மெல்லாம்; நினக்கு அன்பர் ஆயினார்- உன்னிடம் அன்பு கொண்ட உனது தொண்டர்கள் ஆவார்; தானவர்க்கு வேந்தன் நீ- நீ அசுரர் இனத்துக்கு அரசன்; என்னும் தரத்தாயோ- என்ற தரம் மட்டும் உடையவனோ?; (அல்ல) வானவர்க்கும் நீயேஇறை- தேவர்களுக்கும் நீயே தெய்வம்; ஏனவர்க்கு வேண்டின் - உன்னையல்லாது மற்றெவரும் பெற விரும்பினால்; எளிதுஒன்றோ-நீயடைந்த பெருவாழ்வை அடைவதென்பது அத்தனை எளியதொன்றோ? |
வேறு எவரிடமும் கற்காது இறைவனால் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவன் பிரகலாதன். வர்க்கம். குழு (கூட்டம்). தரம் - தகுதி. |
(172) |
6361. | ' "நல் அறமும் மெய்ம்மையும், நான்மறையும், நல் |
| அருளும், |
| எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப் பொருளும், |