| தொல்லை சால் எண் குணனும், நின் சொல் |
| தொழில் செய்ய, |
| மல்லல் உரு ஒளியாய் ! நாளும் வளர்க, நீ !" |
|
மல்லல் உரு ஒளியாய்- வளம் மிக்க அழகிய ஒளிபடைத்த மேனியை உடையவனே; நல்அறமும் மெய்ம்மையும்- என்றும் நன்மை தரும் அறமும் வாய்மையும்; நான்மறையும், நல்அருளும்- நான்கு வேதங்களும், நலம் பயக்கும் திருவருளும்; எல்லைஇலாஞானமும்- அளவில்லாத மெய்யுணர்வாகிய நல்ல ஞானமும்; ஈறு இலா எப்பொருளும்- அழிவில்லாத எவ்விதமான பொருள்களும்; தொல்லைசால் எண் குணனும்- பழமை வாய்ந்த எட்டுக் குணங்களும்; நின்சொல் தொழில் செய்ய - (ஆகிய இவையெல்லாம்) உனது சொல்கேட்டுத் தொழில் செய்ய; நாளும் வளர்க நீ - நாளும் நாளும் நீ வளர்ந்து விளங்குவாயாக. |
"வளர்க நீ" என்பது அடுத்த பாட்டில் வரும் "என்று வரம் அருளி" என்பதனோடு இயைந்து பொருள்படும். மெய்ம்மை - வாய்மை மெய்யுணர்வாகிய ஞானம் வரம்பற்றது என்பதால் 'எல்லை இலா ஞானம்' என்றார். எண் குணங்கள்; தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவுஇல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பனவாம். |
(173) |
பிரகலாதனுக்கு முடிசூட்ட ஆவன புரியுமாறு தேவர்களைப் பணித்தல் |
6362. | 'என்று வரம் அருளி, "எவ் உலகும் கைகூப்ப, |
| முன்றில் முரசம் முழங்க, முடி சூட்ட, |
| நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து, இவனுக்கு |
| ஒன்று பெருமை உரிமை புரிக !" என்றான். |
|
என்றுவரம் அருளி- என்று கூறி பிரகலாதனுக்கு வரம் தந்தருளி; எவ்வுலகும் கை கூப்ப- எல்லா உலகத்தவரும் இவனைக் கை கூப்பி வணங்குமாறு;முன்றில் முரசம் முழங்க- இந்த பிரகலாதனுடைய அரண்மனை முற்றத்திலே பலவகை மங்கல முரசுகள் முழங்க; முடிசூட்ட- மூவுலகுக்கும் முதல்வனாகப் பொன் முடிசூட்ட; நின்ற அமரர் அனைவீரும்- இங்கு நிற்கும் தேவர்களாகிய நீங்கள் எல்லோரும்; நேர்ந்து- மனம் இசைந்து; இவனுக்கு ஒன்று பெருமைஉரிமை புரிக - இப்பிரகலாதனுக்கு |