பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 197

வந்த சிறு நெறி அறியான்" என வீடணனைப் பற்றி கும்பகருணன்
இராமபிரானிடம் கூறுவதாக வருவது (7625) நினைவு கூரத்தக்கது.
நஞ்சை உடன் கொண்டு வாழ்வது எப்படி நன்மை தராதோ அது
போல உன்னை உடன் கொண்டு  வாழ்வதால் வருவது தீமையே
என்பான்  "நஞ்சினை  உடன்  கொடு   வாழ்தல்  நன்மையோ"
என்றான்.
 

(7)
 

6372.

'பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன், உனை;

ஒழி, சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;

விழி எதிர் நிற்றியேல், விளிதி' என்றனன் -

அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்.

 

அழிவினை    எய்துவான்  -    தனக்கு    அழிவை
அடைவதற்கேற்ப; அறிவு நீங்கினான்-   நல்லறிவு  நீங்கப்
பெற்ற இராவணன்; (வீடணனை நோக்கி) 'பழியினை  உணர்ந்து
- எனக்கு  நேர  இருக்கும்  பழியை  எண்ணி;   உனையான்
படுக்கிலேன்
-   உன்னை    நான்   கொல்ல   மாட்டேன்;
சிலபுகலுதல் ஒழி - (எனக்கு இது போன்ற அறிவுரைகள்) சில
கூறுவதை விட்டு விடு; ஒல்லைநீங்குதி- சீக்கிரம் இங்கிருந்து
நீங்கிப்  போய்விடு;   விழி  எதிர்  நிற்றியேல் -  என்கண்
எதிரில் நீ இனி நிற்பாயானால்; விளிதி என்றனன் -  'சாவாய்'
என்று கூறினான்.
 

அழிவை     அடைவதற்குரிய     விதியுடையவனாதலின்
இராவணன்' அழிவினைஎய்துவான்'  எனப்பட்டான்.  பேதைப்
படுக்கும் இழவூழ் (372) என்னும்  திருக்குறளின்  கருத்தினை
இணைத்து    உணர்க.  நிற்றியேல்  நிற்பாயானால்.  விளிதி -
சாவாய்.  எய்துவான் -  முற்றெச்சம்   (வினைமுற்று   எச்சப்
பொருள் தந்து நின்றது).
 

(8)
 

வீடணன் வானில் எழுந்து நீதி பல மொழிதல்
 

6373.

என்றலும், இளவலும் எழுந்து, வானிடைச்

சென்றனன்; துணைவரும் தானும் சிந்தியா -

நின்றனன்; பின்னரும், நீதி சான்றன,

ஒன்று அல பலப்பல, உறுதி ஓதினான்;

 

என்றலும்  இளவலும்  எழுந்து-   என்று   இராவணன்
கூறவும்  அவன்   தம்பியான  வீடணன்   உடனே   எழுந்து;
வானிடைச் சென்றனன் - வானத்தின்  இடையே  சென்றான்;
துணைவரும்  தானும்-  தன்   அமைச்சர்களும்,   தானுமாக;
சிந்தியா நின்றனன் - என்ன செய்வதெனச் சிந்தித்து நின்றான்;
பின்னரும் - வானில்