பக்கம் எண் :

198யுத்த காண்டம் 

எழுந்து நின்ற பிறகும்; நீதி  சான்றன -  நீதியுடன்  அமைந்த
உறுதியுரைகள்;   ஒன்றல   பலப்பல  -  ஒன்றல்லாதனவான
பலவற்றை;   உறுதி   ஓதினான்  -  இராவணனுக்கு   உறுதி
பயப்பனவாகக் கூறினான்.
 

துணைவர் - அமைச்சர் நால்வர்.
  

(9)
 

6374.

'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக

ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,

கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?

வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?

 

வாழியாய்  கேட்டியால் -  அண்ணலே  வாழி !  யான்
கூறுவதைக்  கேட்பாயாக; வாழ்வு   கைம்  மிக-   உனது
வாழ்க்கை  நாளுக்கு  நாள்  மேம்பட;  ஊழி  காண்குறும்-
ஊழிக் காலத்தின் எல்லையைக் காணஉள்ள;  நினது  உயிரை
ஓர்கிலாய்
- உனது உயிரின்  சீர்மையை  எண்ணாதிருக்கிறாய்;
கீழ்மையோர்  சொற்கொடு -   கீழ்மக்களின்   சொல்லைக்
கேட்டு;   கெடுதல்  நேர்தியோ  -   கேட்டை   அடைய
முற்படுகிறாயா?; அறம் பிழைத்தவர்க்கு- அறநெறிகளைவிட்டு
தவறி நடந்தவர்க்கு;  வாழ்மைதான்  வாய்க்குமோ-  நல்ல
வாழ்க்கை அமையுமோ?
 

கைம்மிக - மேம்பட  ஓர்தல் -  ஆய்ந்தறிதல்.  வரத்தால்
பெற்ற வாழ்வை நினைத்துப்  பார்க்க வேண்டாமா?  என்பான்"
ஓர்கிலாய்"  என்றான்.  வாழ்மை   -   வாழ்க்கை.  "அறநெறி
பிழைத்தோர்க்கு  அறம்  கூற்றாகும்"   என்ற   சிலப்பதிகாரம்
சிந்திக்கத்தக்கது.
 

(10)
 

6375.

'புத்திரர், குருக்கள், நின் பொரு இல் கேண்மையர் 

மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர்,

இத்தனை பேரையும், இராமன் வெஞ் சரம்

சித்திரவதை செயக் கண்டு, தீர்தியோ ?

 

புத்திரர் குருக்கள்- உன் புத்திரர்கள்,  குருமார்களாகிய
மேலோர்கள்;    பொருஇல்    கேண்மையர்-   ஒப்பற்ற
உறவினர்கள்;    மித்திரர்-      உனக்குரிய    நண்பர்கள்;
அடைந்துளோர்-  உன்னை   அடைந்து   உன்  ஆதரவில்
வாழும் மக்கள்; மெலியர் வன்மை  யோர்-  வாழ்க்கையில்
மெலிந்தவர்கள்,   வலிமை   மிக்க    வீரர்கள்;   இத்தனை
பேரையும்
-  இத்தனை  பேரையும்;  இராமன்  வெஞ்சரம்-
இராமபிரானுடைய கொடிய அம்புகள்; சித்திரவதை  செய-