பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 199

சித்திரவதை  செய்வதை;  கண்டு  தீர்தியோ - பார்த்துவிட்டு
நீயும் அழியப் போகிறாயோ.
 

குருக்கள் - புரோகிதர் (குருமார்கள்) மித்திரர் - நண்பர்கள்'.
தீர்தல் - அழிதல்.
 

(11)
 

வீடணன் இலங்கையை விட்டுப் போதல்
 

6376.

'எத்துணை வகையினும் உறுதி எய்தின,

ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;

அத்த ! என் பிழை பொறுத்தருளுவாய்' என,

உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான்.

 

எத்துணை   வகையினும் -     எத்தனை     எத்தனை
வகையுண்டோ  அத்தனை   வகையிலும்;   உறுதி   எய்தின
ஒத்தன
-   உனக்கு    உறுதி    பயப்பதற்கொத்த   நீதிகளை;
உணர்த்தினேன்;   உணர   கிற்றிலை  -   எடுத்துக்கூறி
உணர்த்தினேன்; நீ  உணர்ந்தாயல்லை; அத்த !  என்  பிழை
பொறுத்து அருளுவாய் என்
- எனது தந்தை போன்றவனே !
இதுவரை  நான்  ஏதேனும்  பிழை  செய்திருந்தால் அவைகளை
எல்லாம்  பொறுத்து   அருள்   வாயாக   (என்று  கூறிவிட்டு);
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்- நல்ல குணங்களை
உடைய  உத்தமனாகிய  வீடணன்  அந்த  இலங்கை  நகரத்தை
விட்டு நீங்கிச் சென்றான்.
 

அத்தன் - தந்தை (இங்கு இராவணனைத் தந்தை போலவே
வீடணன்   கருதியவன்   என்பது   புலப்படுகிறது).  ஒத்தன -
அறத்துக்குப் பொருந்துவனவான நீதிகள்.
 

வீடணன்   இராவணனுக்குக்   கூறிய    நீதிகள்   யாவும்
இராவணனுக்கு நன்மை பயப்பன.  'சில புகலுதல்  ஒழி'  என்று
வெறுத்துரைத்த இராவணனுக்கு மேலும் உறுதி உரைத்தமையால்
'பிழை பொறுத்தருள்வாய்' என்றான்.
 

(12)
 

6377.

அனலனும், அனிலனும், அரன், சம்பாதியும்

வினையவர் நால்வரும், விரைவின் வந்தனர்:-

கனை கழல் காலினர், கருமச் சூழ்ச்சியர், -

இனைவரும் வீடணனோடும் ஏயினார்.
 

அனலனும், அனிலனும், அரன், சம்பாதியும்- அனலன்,
அனிலன், அரன், சம்பாதி என்ற; வினையவர் நால்வரும்