அறம் தலை நின்றவர்க்கு- அற நெறியிலே தலைசிறந்து விளங்கும் அந்த இராம, இலக்குவர்களிடம்; அன்பு பூண்டனென் - நான் மிக்க அன்புடையவனானேன்; நல்புகழ் அல்லால் - நல்ல புகழ் அல்லாமல்; மறந்தும் வாழ்வு வேண்டலென்- மறந்தும் கூட உயிர் வாழ்தலை விரும்பமாட்டேன்; பிறந்த என் உறுதி - (இராவணன்) என்னுடன் பிறந்த எனக்கு நன்மையான உறுதி தருபவைகளை; நீ பிடிக்கலாய் என- நீ கடைப்பிடிக்காதவனா யிருக்கிறாய் என்று கூறியதால்; துறந்தனென்- இராவணனை விட்டு நீங்கினேன்; இனிச் செயல் சொல்லுவீர் என்றான்- இனி, நான் செய்ய வேண்டிய நற்செயல் என்னவென்று கூறுங்கள் என, வீடணன் தனது அமைச்சர் நால்வரைக் கேட்டான். |
"புகழெனின் உயிரும் கொடுக்குவர். பழிஎனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" என்று புறப்பாடலும் (புறநா.182) உயிரை விற்றுறு புகழ் பெற உழல்பவர்" என்ற பரணியும், (கலிங்கத்துப் பரணி 340). என்ற உரைகளை ஒப்பிடுக. கலிப் பகையாரை 'உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார்' என்று சேக்கிழார் (திருநாவுக். 30) கூறுவதும் நினையத்தக்கது. |
(17) |
இராமனைக் காணுமாறு அமைச்சர்கள் கூற வீடணன் மகிழ்ந்து கூறுதல் |
6382. | 'மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை; |
| தாட்சி இல் பொருள் தரும் தரும மூர்த்தியைக் |
| காட்சியே இனிக் கடன்' என்று, கல்வி சால் |
| சூட்சியின் கிழவரும், துணிந்து சொல்லினார். |
|
தாட்சியில் பொருள் தரும் - தாழ்ச்சி இல்லாத மேலான ஞானத்தைத் தரும்; தரும மூர்த்தியை - அறமே வடிவமான இராமபிரானை; காட்சியே இனிக்கடன்- கண்டு தரிசிப்பதே இனி நமக்குரிய கடமை; மாட்சியின் அமைந்தது- மாண்பு பொருந்தியது (சிறப்புடையது); வேறு மற்று இலை- இதை விட வேறு எதுவுமில்லை; என்று, கல்வி சால் சூழ்ச்சியின் கிழவரும் - என்று, கல்விமிக்க, ஆலோசனை கூறுவதில் வல்ல அமைச்சர்களும்;, துணிந்து சொல்லினார்- தாம் எண்ணித் துணிந்த முடிவைக் கூறினர். |
தாழ்ச்சி, சூழ்ச்சி என்பன எதுகை நோக்கி தாட்சி, சூட்சி என வந்தன. சிறந்தது இராமனைத் தரிசிப்ப தொன்றே. அதை விடச் சிறந்தது வேறு எதுவுமில்லை என்பார் "தரும மூர்த்தியைக் காட்சியே |