பக்கம் எண் :

204யுத்த காண்டம் 

எதுவும் அறிய முடியவில்லை; என்பு உறக் குளிரும் - என்பும்
குளிர்கிறது; நெஞ்சு உருகும்- என்மனம்  அவனை  நினைந்து
உருகுகிறது; அவன்    புன்புறப்   பிறவியின்   பகைஞன்
போலுமால்
- அப்பெருமான்    புல்லிய    இந்தப்  பிறவியை
மாற்றவல்ல பிறவியின் பகைவன் போலும்.
 

முன்புற - இதற்குமுன்பு. புன்புறம் - புல்லியதாகிய உடம்பு.
வீடணன், தான் இராம பிரானைக்  கண்டதுமில்லை.  அவரைப்
பற்றிக் கேள்விப்பட்டதுமில்லை என்றான். ஆனால்  'அவனை
நெருங்கநெருங்க  நெஞ்சு  உருகுகிறது;  என்பும்  குளிர்கிறது.
என்கிறான்' எவரிடமும் பார்த்து, பழகித்தான் அன்பு செலுத்த
இயலும்.  மாறாக  இராமனிடம்  அன்பு  கொள்ளக்  காரணம்
தெரியவில்லை என்கிறான். அவன் அருளாலே  அவன்  தாள்
வணங்கும் பக்தியின் மெய்ப்பாடுகள் குறிக்கப்படுதல்  காண்க.
இறைவன்  அடி  சேர்ந்தார்  பிறவிப்  பெருங்கடல்  நீந்துவர்
(குறள் 10) என்ற கருத்தினைப் 'புன்புறப் பிறவியின்  பகைஞன்
போலுமால்' என்ற தொடர் நினைவூட்டுகின்றது. இராமபிரானை
முதலிற் கண்டபோது 'என்பு எனக்கு உருகுகின்றது, இவர்கின்ற
தளவு இல் காதல்' 3763) என்று  அனுமன்  கூறிய  அனுபவச்
சொற்கள்  இங்கு  நினையத்தக்கன.  கண்ணப்பரின்  நிலையும்
இதுபோன்றதே (பெ.பு. 104)
 

(20)
 

6385.

'ஆதி அம் பரமனுக்கு அன்பும், நல் அறம்

நீதியின் வழாமையும், உயிர்க்கு நேயமும்,

வேதியர் அருளும், நான் விரும்பிப் பெற்றனென்-

போது உறு கிழவனைத் தவம் முன் பூண்ட நாள்.

 

போது  உறு  கிழவனை -  தாமரை  மலரில்  உறையும்
பிரமனை நினைந்து; தவம் முன் பூண்ட நாள்- நான்  முன்பு
தவம்   மேற்கொண்ட   நாளிலே;  ஆதி   அம்பரமனுக்கு
அன்பும்
- உலகுக்கே ஆதியாக விளங்கும் பரம் பொருளிடம்
அன்பும்; நல்லறம்நீதியின்  வழாமையும் - நன்மை  தரும்
அறநெறியிலும் நீதி தவறாமல் நிற்றலும்; உயிர்க்கு  நேயமும்-
எல்லா உயிர்களிடமும் வேறு பாடில்லாத  நேசமும்; வேதியர்
அருளும்
- வேதம் வல்ல  சான்றோரின்  கருணையும்;  நான்
விரும்பிப்
பெற்றனென் - நான் விரும்பி பிரமனிடம் வரமாகப்
பெற்றேன்.
 

பிரமனைக் குறித்துத் தவம் செய்த போது, உயிர்க்கு நேயம்
ஆய எல்லா உயிர்களையும் நேசித்தல்  (ஆன்ம நேயம் என்பர்
ஜீவகாருண்யம்),   வேண்டிப்   பெற்றவரத்தின்படி   வாழ்க்கை
அமைந்ததென்பது கருத்து.
 

(21)