| 6390. | தரளமும், பவளமும், தரங்கம் ஈட்டிய |
| திரள் மணிக் குப்பையும், கனக தீரமும், |
| மருளும் மென் பொதும்பரும், மணலின் குன்றமும், |
| புரள் நெடுந் திரைகளும், புரிந்து நோக்கினான்.* |
| |
தரங்கம் ஈட்டிய- கடல் அலைகள் தொகுத்துச் சேர்த்த; தரளமும் பவளமும்- முத்துக்களையும் பவளங்களையும்; திரள் மணிக்குப்பையும்- திரண்டுள்ள பலவகை மணிக் குவியல்களையும்; கனக தீரமும்- பொன்துகள் நிறைந்த கரைப் பரப்பையும்; மருளும் மென் பொதும்பரும்- பார்த்தவர்கள் அஞ்சும்படியான மெல்லிய சோலைகளையும்; மணலின் குன்றமும்- மணல் திடல்களையும்; புரள் நெடும் திரைகளும்- புரண்டு எழுகின்ற பெரிய அலைகளையும்; புரிந்து நோக்கினான்- இராமபிரான் விரும்பிப் பார்த்தான். |
தரங்கம் - அலை. தீரம் - கரை. பொதும்பர் - சோலை. கடல் அலைகள் கொணர்ந்து ஒதுக்கிய தரளம் முதலியவை பிராட்டி நினைவை இராமபிரானுக்கு ஊட்டின. சீதையை நினையும் விருப்பத்தைப் புரிந்து நோக்கினான் என்றார். புரிதல்-விரும்புதல். |
(26) |
| 6391. | மின் நகு மணி விரல் தேய, வீழ் கணீர் |
| துன்ன அரும் பெருஞ் சுழி அழிப்ப, சோர்வினோடு |
| இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் |
| புன்னை அம் பொதும்பரும் புக்கு, நோக்கினான்.* |
| |
மின் நகுமணி விரல் தேய- மின்னலைப் பழிக்கும்படியான அழகிய விரல்கள் தேயவும்; வீழ் கணீர் துன்னரும் பெருஞ்சுழிஅழிப்ப- கண்களில் இருந்து சிந்தும் கண்ணீர் அரிய பெரிய சுழிகளை அழிக்கவும்; இன் நகை நுளைச்சியர் - இனிய புன் முறுவலை உடைய வலைச்சியர்; சோர்வினொடு இழைக்கும்- மனச் சோர்வுடன் தரையில் எழுதும் கூடல் இழைத்துப் பார்த்ததால் ஏற்பட்ட; ஆழிசால் புன்னை அம்பொதும்பரும்- சுழிகள் ஆங்காங்கு காணப்படும் புன்னைமரச் சோலைகளிலும்; புக்கு நோக்கினான்- இராமபிரான் சென்று பார்த்தான். |
வீழ்கணீர் - சிந்தும் கண்ணீர் பெருஞ்சுழி - கூடற் சுழி. தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வருவானோ, மாட்டானோ என, தரையிலே சுழிகள் எழுதிப் பார்ப்பாள். தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார், வள்ளல் மாலிருஞ் சோலைமணாளனார், பள்ளி கொள்ளு |