பக்கம் எண் :

208யுத்த காண்டம் 

மிடத்தடி கொட்டிடக் கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே" என்பது
நாச்சியார்  திருமொழி 4-1)   தரையில்   சுழி   எழுதும்  போது
இரு கோடுகளும் சேர்ந்து கூடினால் தலைவன் வருவான் என்பது
மகளிர் நம்பிக்கை என  இலக்கிய மரபு  பேசும்.  கூடலிழைத்தல்
எனப் பெறும்.
 

(27)
 

இயற்கைக் காட்சிகளால் இராமன் கவலை கொள்ளல்
 

6392.

கூதிர் நுண் குறும் பனித் திவலைக் கோவை கால்,

மோதி வெண் திரை வர, முட வெண் தாழைமேல்,

பாதி அம் சிறையிடைப் பெடையைப் பாடு அணைத்து

ஓதிமம் துயில்வ கண்டு, உயிர்ப்பு வீங்கினான்.

 

கூதிர்  நுண்  குறும்  பனித்திவலைக்  கோவை,  கால்
மோதி வெண்திரை   வர
-   குளிர்ந்த  மிகச்   சிறிய   பனித்
துளிகளின்   தொகுதியுடன்,  காற்று   வீசுவதால்   வெண்மைநிற
அலைஎழுவதால்;   முடவெண்   தாழை   மேல் -  வளைந்த
வெண்மை   நிறமான   தாழை   மரத்தின்    மீது;   பாதிஅம்
சிறையிடை
- தனது ஒரு பாதி  இறகின்இடையே;  பெடையைப்
பாடு   அணைத்து
-    பெண்    அன்னத்தைப்   பக்கத்திலே
அணைத்துக்  கொண்டு; ஓதிமம்   துயில்வகண்டு-    ஆண்
அன்னங்கள்  உறங்குவதைக்  கண்டு;   உயிர்ப்பு  வீங்கினான்
- இராமபிரான் பெருமூச் செறிந்தான்.
 

பாடு - பக்கம்.  உயிர்ப்பு  -  பெரு  மூச்சு.  இணைபிரியாத
அன்னங்களைக்     கண்டு,     பிரிவுத்துயரால்    இராமபிரான்
பெருமூச்செறிந்தான் என்க.
 

(28)
 

6393.

அருந்துதற்கு இனிய மீன் கொணர, அன்பினால்

பெருந் தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை,

வருந் திசை நோக்கி, ஓர் மழலை வெண் குருகு,

இருந்தது கண்டு நின்று, இரக்கம் எய்தினான்.

 

அருந்துதற்கு  இனிய   மீன்  கொணர-  உண்பதற்குச்
சுவையான  மீனைக்  கொண்டு   வர; அன்பினால் -  பெண்
குருகினிடம் கொண்ட பேரன்பால்; பெருந்தடங் கொம்பிடை-
தான்  வசிக்கும்  பெரிய   மரக்கிளையில்   இருந்து;  பிரிந்த
சேவலை
- பிரிந்து  சென்ற ஆண்  நாரையை;  வரும்  திசை
நோக்கி
- அது வருகின்ற திசையைப் பார்த்து;  ஓர்  மழலை
வெண் குருகு
- ஒரு இளமையான வெண்மை  நிறம்  கொண்ட
பெண் நாரை; இருந்தது