கேள்வியின் துறை - நூற்கேள்வியின் துறை. அரக்க இனத்தினனான வீடணன், வானர சேனைக்குப் பக்கம் செல்வதால் ஏதேனும் தவறுண்டாகுமோ என்ற ஐயம் எதுவுமின்றிச் சென்றான் என்பதை 'அயிர்ப்பில் சிந்தையான்' என்றது காட்டும். |
(33) |
| 6398. | முற்றிய குரிசிலை, 'முழங்கு தானையின் |
| உற்றனர், நிருதர் வந்து' என்ன ஒன்றினார், |
| 'எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர்' என்று, இடை |
| சுற்றினர்-உரும் எனத் தெழிக்கும் சொல்லினார். |
| |
முற்றிய குரிசிலை- அங்கு வந்தடைந்த வீடணனை (பார்த்தவானர வீரர்கள்) முழங்கு தானையின் உற்றனர் நிருதர் வந்து என்ன - ஆரவாரம் மிக்க வானரப் படையில் அரக்கர் வந்து புகுந்தனர் என்று; ஒன்றினார்- வீரர்கள் எல்லாம் ஒன்றாகத் திரண்டனர்; எற்றுதிர் பற்றுதிர், எறிதிர் என்று- அடியுங்கள் பிடியுங்கள் ஆயுதங்களால் எறியுங்கள் என்று கூறி; உரும் எனத் தெழிக்கும் சொல்லினர் - இடியென அதட்டும் சொல்லினராகி; இடை சுற்றினர்- வீடணன் முதலியோரைச் சூழ்ந்து கொண்டனர். |
(34) |
| 6399. | 'தந்தது தருமமே கொணர்ந்துதான்; இவன் |
| வெந் தொழில் தீவினை பயந்த மேன்மையான், |
| வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்; நம் |
| சிந்தனை முடிந்தன' என்னும் சிந்தையார். |
| |
தருமமே கொணர்ந்துதான் தந்தது- இந்த அரக்கர்களைத் தரும தேவதை தானே நம்மிடம் கொண்டு வந்து தந்தது; இவன் வெந்தொழில் தீவினை பயந்த மேன்மையான் - இவன், கொடுந்தொழில் செய்யவந்த தீயவினை பயந்த மேன்மையோன் ஆவான்; வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்- வந்தவனாகிய இவன் இலங்கை வேந்தனான இராவணனே ஆகும். நம் சிந்தனை முடிந்தன- இலங்கை வேந்தனை வெல்ல வேண்டும் என்ற நமது எண்ணம் நிறைவேறிவிட்டது; என்னும் சிந்தையார்- என்ற எண்ணம் கொண்டவர்களாக அந்த வானர வீரர் இருந்தனர். |
இவன் கொடுந் தொழிலன் தீவினை பயனளிக்கப் பெற்றமையால் கொடுஞ் செயல் புரிவதில் மிக்கவனாவான் என்பதை 'வெந்தொழில் தீவினை பயந்தமேன்மையான்' என்றார். வந்த இவன் இலங்கை வேந்தன் |