பக்கம் எண் :

212யுத்த காண்டம் 

இராவணனே;  இராவணனை வெல்லுவது  என்ற நம்  விருப்பம்
நிறைவேறியது   என்பார்'  நம்  சிந்தனை  முடிந்தன'  என்றார்.
நமக்குச்  சிரமமின்றி  தரும  தேவதையே   நமக்கு  இவனைத்
தந்தது என்பார்' தருமமே கொணர்ந்து தந்தது' என்றார்.
 

(35)
 

6400.

"இருபது கரம்; தலை ஈர்-ஐந்து" என்னும் அத்

திருவிலிக்கு அன்னவை சிதைந்தவோ?' என்பார்,

'பொரு தொழில் எம்மொடும் பொருதி, போர்' என்பார்,

ஒருவரின் ஒருவர் சென்று, உறுக்கி ஊன்றுவார்.

 

அத்திருவிலிக்கு- அந்த நற்பேறில்லாத தீவினையாளனுக்கு;
இருபதுகரம் தலை ஈர் ஐந்து என்னும் - இருபது  கைகளும்,
பத்துத்   தலைகளும்   உண்டு   என்பார்களே;   அன்னவை
சிதைந்தவோ   என்பார்
-   அவை    எல்லாம்   சிதைந்து
அழிந்தனவோ  என்பார்கள்;   பொரு தொழில்  எம்மொடு
பொருதிபோர்  என்பார்
-  போர்த்   தொழில்   வல்லவன்
என்றால் எங்களோடு; போரிடவருகஎன்பார்கள்  ஒருவரின்
ஒருவர் சென்று
- வானர வீரர்களில் ஒருவரை ஒருவர் முந்திக்
கொண்டு    சென்று;    உறுக்கி    ஊன்றுவார்   - சினந்து
எதிர்க்கலாயினர்.
 

திருவிலி -  நல்வினைப்  பயன்  இல்லாதவன்.  உறுக்கி -
வெகுண்டு.
 

(36)
 

6401.

'பற்றினம் சிறையிடை வைத்து, பாருடைக்

கொற்றவர்க்கு உணர்த்துதும்' என்று கூறுவார்;

'எற்றுவது அன்றியே, இவனைக் கண்டு, இறை

நிற்றல் என், பிறிது?' என நெருக்கி நேர்குவார்.

 

பற்றினம்  சிறையிடை  வைத்து-  இவர்களைப்  பிடித்துச்
சிறையிலே அடைத்து வைத்து விட்டு; பாருடைக் கொற்றவர்க்கு
உணர்த்துதும்
- இவ்வுலகுக்கெல்லாம் அரசனான இராமபிரானுக்கு
உணர்த்துவோம்; என்று  கூறுவார்-;   எற்றுவது  அன்றியே-
உடனே அடித்துக் கொல்லுவதல்லாமல்; இவனைக் கண்டு இறை
நிற்றல் பிறிது என்
- இவனைப் பார்த்து,  சிறிது  நேரம்  நிற்பது
ஏன் என்று; நெருக்கி நேர்குவார் - நெருக்கி எதிர்ப்பாராயினர்.
 

பற்றினம் - பிடித்தவர்களாக பாருடைக் கொற்றவன் - உலகுக்
கெல்லாம் நாயகனான இராமபிரான்.
 

(37)