பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 213

6402.

'இமைப்பதன்முன் விசும்பு எழுந்து போய பின்,

அமைப்பது என், பிறிது? இவர் அரக்கர் அல்லரோ?

சமைப்பது கொலை அலால், தக்கது யாவதோ?

குமைப்பது நலன்' என முடுகிக் கூறுவார்.

 

இமைப்பதன் முன்-  கண்ணை  இமைப்பதற்குள்;  விசும்பு
எழுந்து
போய பின்-  இவர்  ஆகாயத்திலே  எழுந்து  சென்ற
பின்பு; அமைப்பது என்  பிறிது- நாம்  வேறு  என்ன  செய்ய
முடியும்; இவர் அரக்கர்  அல்லரோ-  இவர்கள்  அரக்கர்கள்
அல்லவா?; சமைப்பது கொலை அலால் - நாம் செய்யத்தக்கது
இவர்களைக் கொலை செய்வதே அல்லாமல்; தக்கது  யாவதோ
- தகுந்த செயல்  வேறு  யாதுள்ளது?;  குமைப்பது  நலன்என
- உருத்தெரியாமல் இவர்களை  அழிப்பதே  நல்லதாகும்  என்று;
முடுகிக் கூறுவார்- விரைவாகக் கூறுவாராயினர்.
 

சமைத்தல் - செய்தல். குமைப்பது - அழிப்பது.
 

(38)
 

அனுமன் ஏவலால் மயிந்தனும் துமிந்தனும் வருதல்
 

6403.

இயைந்தன இயைந்தன இனைய கூறலும்,

மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்,

அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்,

நயம் தெரி காவலர் இருவர், நண்ணினார்.

 

இயைந்தன   இயைந்தன -  வானர   வீரர்   தமக்குத்
தோன்றியவைகளை  எல்லாம்; இனைய  கூறலும்-  இவ்வாறு
கூறியபோது; மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்-
மயிந்தன்,   துமிந்தன்      என்ற     பெயர்களை    உடைய
மாண்புடையவர்கள்;  அயிந்திரம்  நிறைந்தவன்-  அயிந்திரம்
என்னும் இலக்கணத்தைக் கற்று  நிரம்பியவனான  அனுமானது;
ஆணைஏவலால்-  உத்திரவுப்படி  ஏவியதால்;  நயம்  தெரி
காவலர்
- நீதியைத் தெரிந்த காவலர்கள்;இருவர் நண்ணினார்-
இரண்டு பேர் அங்கு வந்தடைந்தனர்.
 

அயிந்திரம் நிறைந்தவன்  அனுமன். அயிந்திரம் இந்திரனால்
செய்யப்பெற்ற வடமொழி இலக்கண நூல் என்பர்.
 

(39)
 

6404.

விலக்கினர் படைஞரை; வேதம், நீதி நூல்,

இலக்கணம், நோக்கிய இயல்பர் எய்தினார்,-