| 'சலக் குறி இலர்' என, அருகு சார்ந்தனர்- |
| புலக் குறி அற நெறி பொருந்த நோக்கினார். |
| |
படைஞரை விலக்கினர் - (வந்த காவலர்களான மயிந்தனும், துமிந்தனும்) வானரப் படைவீரர்களை விலகும்படி செய்தார்கள்; வேதம் நீதி நூல்- வேதத்திலும், நீதி நூல்களிலும் கூறப்பட்ட; இலக்கணம் நோக்கிய- மனித இலக்கணங்களை நன்கறிந்த; இயல்பர் எய்தினார்- இயல்புடைய அக்காவலர்கள் விபீடணன் முதலியோரை நெருங்கினர்; 'சலக்குறி இலர்' என- இவர்களிடம் வஞ்சகச் செய்கை எதுவும் இல்லை என்று; அருகு சார்ந்தனர் - அவர்களுக்குமிக அருகில் சென்றனர்; புலக்குறி அற நெறி- சிறந்த ஞானமுள்ளமைக்குரிய அடையாளத்தையும், அறநெறி நின்றவர் என்பதையும்; பொருந்த நோக்கினர்- பொருந்தியிருப்பதைப் பார்த்தனர். |
படைஞர் - (வானரப்) படைவீரர்கள். காவலர்களான மயிந்தனும் துமிந்தனும் வேதங்களிலும், நீதி நூல்களிலும் கூறப்பட்ட மனித இயல்புகளையும், நல்லார், பொல்லார் இலக்கணங்களையும் நன்றாகக் கற்றறிந்தவர்கள் என்பதை 'வேதம் நீதி நூல் இலக்கணம் நோக்கிய இயல்பர்" என்றார். சலக்குறி - வஞ்சகர் என்பதற்கான அடையாளம் புலக்குறி- ஞானம் உள்ளவர்கள் என்பதற்கான அடையாளம். |
(40) |
மயிந்தன் வினாவும் அனலன் விடையும் |
| 6405. | 'யார்? இவண் எய்திய கருமம் யாவது? |
| போர்அது புரிதிரோ? புறத்து ஓர் எண்ணமோ? |
| சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம், |
| சோர்விலீர், மெய்ம் முறை, சொல்லுவீர்' என்றான். |
| |
யார்? இவண் எய்திய கருமம் யாவது?- (அனுமன் ஆணைப்படி வந்த காவலரில் மூத்தவனான மயிந்தன் வீடணன் முதலியோரை நோக்கி) நீங்கள் யார்? இங்கு வந்த காரியம் யாது? போரது புரிதிரோ- போர் செய்ய வந்தீர்களா?; புறத்து ஓர் எண்ணமோ? - அல்லது, அதுவல்லாத வேறு ஒரு எண்ணத்துடன் வந்தீர்களா?; சார்வு உற நின்ற நீர் - இந்த வானரப் படையைச் சார்ந்து நின்றிருக்கும் நீங்கள்; சமைந்தவாறுஎலாம் - உங்கள் மனத்தில் நினைத்து வந்ததை எல்லாம்; சோர்விலீர்- |