பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 215

மறதியில்லாமல்;   மெய்ம்முறை   சொல்லுவீர்   என்றான்-
உண்மையை மறைக்காது முறையாகக் கூறுங்கள் என்று மயிந்தன்
கேட்டான்.
 

தொடர்ந்து வரும் 6410ஆம் பாடலில் "மயிந்தனும் அவ்வுரை
மனத்து வைத்து"  என்று  கூறப்படுவதால்  இங்குக்  கேட்டவன்
மயிந்தன்  என்று   கொள்ளப்பட்டது.  மயிந்தனும்,  துமிந்தனும்
சகோதரர்கள். சமைந்தவாறு-எண்ணியவாறு சோர்வு-மறதி;  மனச்
சோர்வுமாம்.   இப்படி  அகப்பட்டுக்   கொண்டோமே   என்று
சோர்வடையாதீர்கள் உண்மையைக் கூறுங்கள் என்பது கருத்து.
 

(41)
 

6406.

'பகலவன் வழி முதல், பாரின் நாயகன்,

புகல் அவன் கழல் அடைந்து, உய்யப் போந்தனன்-

தகவு உறு சிந்தையன், தரும நீதியன்,

மகன் மகன் மைந்தன் நான்முகற்கு, வாய்மையான்.

 

தகவு உறு சிந்தையன்-  (மயிந்தன் வினவிய  வினாவுக்கு,
மறு மொழியாக, வீடணனுடைய  அமைச்சர்களில்  மூத்தவனான,
அனலன்)  தகைமை வாய்ந்த  மனத்தை  உடையவனும்;  தரும
நீதியன்
- அறநெறி நின்ற, நீதியை உடையவனும்; நான்முகற்கு
மகன்  மகன்
  மைந்தன் -  பிரம   தேவனுக்குப்  பேரனுக்கு
மகனும்;  வாய்மையான்-  உண்மையாளனும்  ஆனவீடணன்;
பகலவன் வழி  முதல் -  சூரிய  குலத்தில்  தோன்றியவனும்;
பாரின்  நாயகன் -  உலகுக்  கெல்லாம்  தலைவனும்  ஆன
இராமபிரானே; புகல் - எமக்குப்  புகலிடம்  ஆவான்  என்று;
அவன் கழல்  அடைந்து -  அப்பெருமானது  திருவடிகளை
அடைந்து; உய்யப் போந்தனன் - உய்வு  பெற  வந்துள்ளான்
(என்று கூறினான்).
 

தகவு - நடுவுநிலைமை.  நான்முகனுக்கு  மகன்  புலத்தியன்;
அவன் மகன் விச்சிரவசு; அவன் மகன் வீடணன்.
 

பகலவன் -   சூரியன்.   வழிமுதல் -   வழித்   தோன்றல்.
இராமபிரானது திருவடிகளுக்கே  அடைக்கலமாகி  அவனருளால்
உய்வு பெற வந்தான் என்பதை 'புகல் அவன்  கழல்  அடைந்து
உய்யப் போந்தனன்' என்றான். உலகனைத்துக்கும்  தலைவனான
திருமாலின் அவதாரம் ஆதலின்  இராமனை  "பாரின்  நாயகன்"
என்றான். நில மகளுக்குத் தலைவன் எனினும் பொருந்தும்.
 

(42)
 

6407.

'அற நிலை வழாமையும், ஆதி மூர்த்திபால்

நிறைவரு நேயமும், நின்ற வாய்மையும்,