பக்கம் எண் :

42   யுத்த காண்டம்

வெல்லும் என்று நினைப்பது தர்க்கரீதியாகத்    தவறு  என்கிறான்
இராவணன். இராவணனுடைய இந்த  அலட்சிய மனப்பான்மைக்கும்
காரணம் அவனுடைய தன்னம்பிக்கை, வர பலம் என்று இரண்டுமே
ஆகும்.
 

வேறு வழியில்லாத  வீடணன், இந்த  இரண்டு கோட்டைகளையும்
(தன்னம்பிக்கை,   வர    பலம்)     தகர்க்க    நினைத்து இரணியன்
வதையைக் கூறுகிறான்.  இரணியனுடைய    தன்னம்பிக்கை, வர பலம்
என்பவை, இராவணனுடையதை விடப் பல மடங்கு உயர்ந்தவை ஆகும்.
மனிதரால், விலங்கால் அழிவு வரக் கூடாது என்ற வரத்தை இராவணன்
பெறவில்லை. இரணியன் அந்த வரத்தையும் தனித்  தனியே    பெற்று
வைத்திருந்தான். பெண்ணாசை உடையவன் அல்லன் ஆதலால் எந்தப்
பெண்ணின் மூலமும் அவனுக்கு அழிவு வரவில்லை.  அந்த வரத்திலும்
ஓர் ஓட்டை இருந்தது. விலங்காலோ,  மனிதராலோ அழிவு வரக்கூடாத
வரம். இவை    இரண்டும்    சேர்ந்த    நரவிலங்கு     இரணியனை
அழித்துவிட்டது. இவ்வாறு  எடுத்துக்காட்டுகிறான், வீடணன். வீடணன்
வாதம் முழுவதிலும்  மானம், வீரம், புகழ் என்ற ஒன்றுபற்றியும் அவன்
பேசவில்லை.
 

தன் கருத்துக்கு மாறுபட்ட வாதங்கள் புரிந்த     கும்பகர்ணனிடம்
இராவணன் கோபம் கொள்ளவில்லை, ஆனால்,     அதே காரியத்தைச்
செய்த வீடணனிடம் ஏன் சினம் கொள்ள  வேண்டும்?  'விழி    எதிர்
நிற்றியேல் விளிதி' என்று ஏன்   வீடணனிடம்மட்டும்   கூறவேண்டும்?
வீடணனுடைய வாதங்களைப்   பொறுமையாகக்  கேட்ட இராவணனுக்கு
ஓர் உண்மை தெளிவாயிற்று. அந்த வீடணன் தன்னுடைய அகமனத்தின்
ஆழத்தில்   புதைந்திருக்கிற   உயிராசை என்னும் ரகசியத்தைப் புரிந்து
கொண்டான்;   என   நினைப்பதால்தான்  இராவணன் கோபம் எல்லை
கடந்தது. பிறர் அறியாவண்ணம் அடிமனத்தின் ஆழத்தில்     புதைத்து
வைக்கப்பட்டுள்ள இந்த இரகசியத்தை வீடணன்      கண்டுகொண்டது
இராவணனுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும்    உண்டாக்கி விட்டது.
வீடணனைப் பார்க்கும் தோறும், தன்   அகமனத்தின்      ஆழத்தைப்
புரிந்துகொண்டவன் என்ற எண்ணம்    தோன்றுமாதலால்   இராவணன்
அவனைப் பார்த்து, 'என் முகத்தில் விழிக்காமல் ஓடிப் போ' எனப் பேச