அறிவுக்கு எல்லையே இல்லை; பெருத்து உயர்தவத்தினானும்- பெரிய உயர்ந்த தவஒழுக்கத்தாலும்; பிழைப்பு இலன்- குறையுடையவன் அல்லன்; என்னும் பெற்றி - என்னும் தன்மை; திருத்தியதாகுமன்றே நம் வயின் சேர்ந்த செய்கை - நமது பக்கம் சேர்ந்த செய்கை ஒன்றே விளக்குமல்லவா? |
'காலமே நோக்கினும் ஏலுமே' என நீலன் கூறியதை (6465) மறுப்பவன் போல் 'போந்த காலமும் நன்று' என்றது குறிப்பிடத்தக்கது. 'காதல் அருத்தியும்' அரசின் மேற்றே என்பதற்கு இலங்கை ஆட்சியின் மீதே என்றும் பொருள் கூற இடமுண்டு. எனினும் அது சிறப்புடைய கருத்தன்று. வீடணன் பேரறிவுக்கும், உயர்ந்த தவ ஒழுக்கத்துக்கும், ஞான உணர்வுக்கும் வெற்றரசு நாடியதாகக் கொள்ளல் பொருந்தாது. 'திருத்தியதாகும்' என்பதற்கு வீடணன் அரக்கப்பிறப்பில் இருந்து நீதியால் வந்த நெடுந்தரும நெறியினனாகத் திருந்தியதாகவும் கூறுதல் பொருந்தும். |
(104) |
6469. | 'மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் |
| சொன்ன |
| பெற்றியே பெற்றி; அன்னது அன்றுஎனின், பிறிது |
| ஒன்றானும், |
| வெற்றியே பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க, |
| பற்றுதல் அன்றி உண்டோ, அடைக்கலம் |
| பகர்கின்றானை? |
| |
மற்று இனி உரைப்பதென்னே - இனி வேறாக உரைப்பதற்கு என்ன உண்டு? மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி - அனுமன் ஆராய்ந்து கூறிய ஆலோசனையே மேலான ஆலோசனை; அன்னது அன்று எனில்- (வீடணனை ஏற்றுக் கொள்ளுதலாகிய அது அல்ல என்றால்; பிறிது ஒன்றானும் - அனுமன் சொன்னது நாம் செய்யத்தகாததாயினும்; வெற்றியே பெறுக - வீடணனை ஏற்றுக் கொள்வதால் வெற்றியே உண்டாகட்டும்; தோற்க வீக வீயாது வாழ்க - நாம் தோற்கட்டும் அழியட்டும் அழியாது வாழட்டும்; அடைக்கலம் பகர்கின்றானை - அபயம் என்று வந்தவனை நாம் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறேதும் உள்ளதோ? இல்லையென்பதாம். |
அனுமன் கருத்தும் தனது கருத்தும் ஒன்றே என்பதால் வேறுதனியாக நான் கூற வேண்டியதில்லை என்பதால் "மற்று இனி உரைப்பது என்னோ" என்றான். |
(105) |