பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 253

6470.

'இன்று வந்தான் என்று உண்டோ? எந்தையை 

யாயை முன்னைக்

கொன்று வந்தான் என்று உண்டோ? அடைக்கலம்

கூறுகின்றான்;

துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே; 

பின்னைப்

பின்றும் என்றாலும், நம்பால் புகழ் அன்றிப் பிறிது

உண்டாமோ?

 

அடைக்கலம்  கூறுகின்றான் -   நம்மிடம்   அடைக்கலம்
என்று   கூறி   வந்த இவன்; இன்று வந்தான் என்றுண்டோ -
இன்றுதான்     வந்தான்      என்று    விலக்குதல்   உண்டோ;
எந்தையையாயை முன்னைக் கொன்று வந்தான் என்றுண்டோ
- எனது தந்தையையும்,   தாயையும்   முன்பு கொன்றுவிட்டு வந்த
ஒருவனானாலும்   விலக்குவதுண்டோ;   துன்றி   வந்து அன்பு
செய்யும்   துணைவனும் அவனே
-   நம்மை  நெருங்கி வந்து
நமக்கு   அன்பு செய்கின்ற   துணைவன்   அவனே; பின்னைப்
பின்றும் என்றாலும்
-   பின்பு   நம்மிடம்   மாறுபடுவான் என்ற
போதிலும்; நம்பால் புகழ்  அன்றி  - இவனை ஏற்றுக்கொள்ளும்
நமக்கு புகழ்தானே அல்லாது;  பிறிது  உண்டாமோ - வேறு பழி
உண்டாகுமோ? 
 

நம்மைச்சரண் அடைய வந்த வீடணன் இதற்குமுன்பு நமக்குப்
பழக்கமில்லாதவனாய்  இன்றுதான்   வந்த   புதியவன் என்றாலும்
அதுகாரணமாக இவனை விலக்குதல் கூடாது   என்பான்.  "இன்று
வந்தான் என்றுண்டோ" என்றான். இவன் நல்ல பண்பும்,   தவமும்
இல்லாத,   எனது   தாய்   தந்தையரைக்   கொன்றுவிட்டு  வந்த 
கொடியவன் என்றாலும் விலக்குதல் கூடாது என்பதை  "எந்தையை,
யாயை முன்னர்   கொன்று   வந்தான்   என்றுண்டோ"  என்றான்.
நம்மைச் சேரவந்த இவனே அன்பு செய்யும் துணைவன். சிலகாலம்
சென்று     நம்முடன்       மாறுபடுவானாயினும்      இவனைச்
சேர்த்துக்கொண்ட நமக்குப் புகழ்தானே   தவிர,   பழி   எதுவும்
வராது என்பான்.   'பின்னைப்   பின்றும்   என்றாலும்   நம்பால்
புகழ் அன்றிப் பிறிது   உண்டாமோ"  என்றான். புகழ் அல்லாதது
பழிதானே எனவே பிறிது என்றான்.
 

(106)
 

6471.

'பிறந்த நாள் தொடங்கி, யாரும், துலை புக்க

பெரியோன் பெற்றி

மறந்த நாள் உண்டோ? என்னைச் சரண் என

வாழ்கின்றானைத்