| துறந்த நாட்கு இன்று வந்து துன்னினான் |
| சூழ்ச்சியாலே |
| இறந்த நாள் அன்றோ, என்றும் இருந்த நாள் ஆவது!' |
| என்றான். |
| |
பிறந்தநாள் தொடங்கி - எவரும் தாம் பிறந்தநாள் முதலாக; துலை புக்கபெரியோன் பெற்றி - ஒரு புறாவுக்காகத் தானே தராசுக் கோலில் சென்றமர்ந்த பெரியோன் ஆகிய சிபிச் சக்கரவர்த்தியின் பெருமையை; யாரும் மறந்த நாள் உண்டோ - எவரேனும் மறந்த ஒரு நாளும் உள்ளதோ? இல்லை அன்றோ? என்னைச்சரண் என வாழ்கின்றானை- என்னை அடைக்கலம் என்று கூறி வந்து வாழ இருக்கும் இந்த வீடணன்; துறந்த நாட்கு- ஏற்றுக்கொள்ளாது விலக்கிய நாளைவிட; இன்று வந்து துன்னினான் - இன்று இங்கு வந்து நம்மை அடைந்த இவனுடைய; சூழ்ச்சியாலே - வஞ்சகச் செயல்களால்; இறந்த நாள் அன்றோ- நான் இறக்க நேர்ந்தால் அவ்வாறு இறந்த நாள் அல்லவா; என்றும் இருந்த நாள் ஆவது என்றான்- நான் என்றும் நிலை பெற்றிருந்த நாள் ஆவது என இராமன் கூறினான். |
துலைபுக்க பெரியோன் - சிபிச்சக்கரவர்த்தி. இன்று வந்து நம்மைச் சேர்ந்த இவனுடைய சூழ்ச்சியாலே நான் இறக்க நேர்ந்தால் அந்த நாளே நிலைபெற்றிருக்கும் நாளாகும் என்பதை 'சூழ்ச்சியாலே இறந்த நான் அன்றோ என்றும் இருந்த நாள்' என்றான். சிபியை உலகம் மறந்த நாள் இல்லை. அந்த மன்னன் வழிவந்த நான் அடைக்கலம் என்று வந்தவனை ஏற்றுக்கொள்வது தானே முறை என்பது கருத்து. |
(107) |
6472. | 'இடைந்தவர்க்கு, "அபயம், யாம்!" என்று |
| இரந்தவர்க்கு, எறி நீர்வேலை |
| கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற் |
| கண்டிலீரோ? |
| உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று |
| ஈயான் ஆயின், |
| அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் |
| ஆம்? ஆண்மை என் ஆம்? |
| |
இடைந்தவர்க்கு - (பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சுக்கு) அஞ்சி விலகி வந்தவர்களும்; அபயம் யாம் என்று இரந்தவர்க்கு - நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று |