பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 255

கெஞ்சியவர்களும்; எறி நீர் வேலை கடைந்தவர்க்கு ஆகி -
அலை   எறியும்   பாற்கடலைக்     கடைந்தவர்களும்   ஆன
தேவர்களுக்காக;   ஆலம்     உண்டவற்   கண்டிலீரோ -
நஞ்சைத்தான்   உண்டு,  அவர்களைக்காத்த சிவபிரானை நீங்கள்
கண்டதில்லையா?     உடைந்தவர்க்கு     உதவானாயின்
தோல்வியால்   சிதைந்து    நொந்தவர்களுக்கு   உதவவில்லை 
என்றால்; உள்ளது ஒன்று ஈயானாயின் -   தன்னிடம்  உள்ள
பொருளைக்  கேட்டுவந்தவர்களுக்குத்   தரவில்லை   என்றால்;
அடைந்தவர்க்கு   அருளானாயின் -   அடைக்கலம்  என்று
வந்தவர்களுக்குக்     கருணைகாட்டி    அருள்  செய்யவில்லை
என்றால்; அறம் என்னாம்  ஆண்மை என்னாம் - அறத்தால்
என்னபலன்? ஆண்மையால் என்ன பயன்?
 

எறிநீர்   வேலை - அலை   பொங்கும்கடல். ஆலம்-நஞ்சு.
உடைந்தவர்  -   பகைவருக்குத்     தோற்று     வந்தவர்கள்.
வலிமைக்குறைவால்     தோல்வியைத்     தழுவியவர்களுக்கும்
உதவவில்லை    என்றாலும்      வறுமையால்      நாடிவந்து
இரந்தவர்களுக்கு   ஒரு   பொருள்    தரவில்லை என்றாலும்,
அடைக்கலம் என்று   வந்தவர்களை   ஏற்று   அருளவில்லை
என்றாலும் அறத்தாலும்  ஆண்மையாலும் எந்தப் பயனுமில்லை
என்பதை 'அறம் என்னாம்?   ஆண்மை என்னாம்?" என்றான்.
அடைக்கலம் புகுந்த   தேவர்களைக்காக்க, நஞ்சினை  உண்ட
சிவபெருமானை   நீங்கள்    அறியவில்லையா      என்பான்.
"கண்டிலீரோ" என்றான்.   இடைதல் -  அஞ்சுதல்.  உடைதல்
-தோற்றல். 
 

(108)
 

6473.

'பேடையைப் பிடித்து, தன்னைப் பிடிக்க வந்து 

அடைந்த பேதை

வேடனுக்கு உதவி செய்து, விறகிடை வெந் தீ மூட்டி, 
பாடுறு பசியை நோக்கி, தன் உடல் கொடுத்த

பைம் புள்

வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது

அன்றோ?

 

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்கவந்து அடைந்த
பேதை  வேடனுக்கு
- பெண்புறாவைப் பிடித்துக்கொண்டு அதன்
ஜோடியான   தன்னையும் பிடிக்கவந்திருந்த பேதைத்தன்மையுடைய
வேடன்   ஒருவனுக்கு;   உதவி செய்து - குளிர்காலத்தில் குளிர்
மாற்ற   உதவியாக; விறகிடை வெந்தீ மூட்டி - விறகு பொறுக்கி
வந்து வெப்பமான தீயை மூட்டிக் குளிரைப்போக்கி; பாடுறு பசியை
நோக்கி
- அவனது பெரும்பசியைப் பார்த்து; தன் உடல்