கொடுத்த பைம்புள் - அந்தத்தீயில் வீழ்ந்து தனது உடலையே அவனுக்கு உணவாகக் கொடுத்த ஒரு ஆண்புறா; வீடு பெற்றுயர்ந்த வார்த்தை - பரமபதம் பெற்று உயர்ந்தது என்ற வார்த்தை; வேதத்தின் விழுமிது அன்றோ- வேதத்தைவிட மேலான தொன்றல்லவா? |
(109) |
6474. | 'போதகம் ஒன்று, கன்றி இடங்கர் மாப் பொருத |
| போரின், |
| "ஆதிஅம் பரமே! யான் உன் அபயம்!" என்று |
| அழைத்த அந் நாள், |
| வேதமும் முடிவு காணா மெய்ப்பொருள் வெளி |
| வந்து எய்தி, |
| மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ, |
| மறப்பிலாதார்? |
| |
போதகம் ஒன்று - (கஜேந்திரன் என்ற பெயர் கொண்ட) யானை ஒன்று; கன்றி இடங்கர்மாப் பொருத போரின்- தாமரைப்பொய்கையில் சினம் கொண்ட முதலை ஒன்று தனது காலைப் பற்றி இழுத்துச்செய்த போரிலே தளர்ந்துபோய்; ஆதியம் பரமே யான் உன் அபயம் - ஆதிமூலமாயுள்ள பரம்பொருளே நான் உனது அடைக்கலம்; என்று அழைத்த அந்நாள் - என்று அழைத்த அந்த நாளிலே; வேதமும் முடிவு காணா மெய்ப்பொருள் - வேதங்களும் தேடி முடிவுகாண முடியாத மெய்ப்பொருளாகிய பரமன்; வெளிவந்தெய்தி - அந்த யானைக்காக வடிவெடுத்து வெளிப்பட்டு அந்த யானையை அடைந்து; மாதுயர் துடைத்த வார்த்தை - முதலையைக் கொன்று யானைக்குற்ற துன்பத்தை மாற்றியருளினார் என்ற வார்த்தையை; மறப்பிலாதார் மறப்பரோ - மறதியில்லாத அடியார்கள் என்றும் மறப்பார்களோ? (மறக்கமாட்டார்கள்) |
போதகம் - யானை. இடங்கர்மா-முதலை. மெய்ப்பொருளே யானைக்கு அடைக்கலம் தந்து காத்தார் என்னும் போது நம்மை அடைந்த வீடணனை ஏற்றுக்கொள்ளுதல் நமது கடமை அல்லவா என்பது கருத்து. |
(110) |
6475. | 'மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் |
| மாயன், |
| தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் |
| தானே |