பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 257

என்னினும், அடைந்தோர்தம்மை ஏமுற இனிதின்

ஓம்பி,

பின்னும் வீடு அளிக்கும் என்றால், பிறிது ஒரு சான்றும்

உண்டோ?

 

மன்னுயிர்   எல்லாம் -   உலகத்தில்  நிலைத்து வாழும்
உயிர்களை  எல்லாம்;   வருவித்து   வளர்க்கும்   மாயன்-
படைத்து,   வளர்க்கின்ற   பெருமான்;   தன்   அன உலகம்
எல்லாம் 
  - தன்னை   ஒத்த  உலகத்தை எல்லாம்; தருமமும்
எவையும் தானே   என்னினும்
- அவ்வுலகத்துக்குத் தர்மமும்
அவற்றின் பயனும்   பிறவும் தானே  என்றாலும்; அடைந்தோர்
தம்மை
- தன்னைச்   சரண் அடைந்தவர்களை எல்லாம்; ஏமுற
இனிதின் ஓம்பி
-   இன்பமுற   இனிதே பாதுகாத்து; பின்னும்
வீடளிக்கும் என்றால் 
- மறுமையில்  வீட்டின்பத்தையும் தந்து
காப்பான்   என்றால்;     பிறிது  ஒரு சான்றும்  உண்டோ -
சரணடைந்தவர்களைக்  காக்க   வேண்டும்   என்பதற்கு   வேறு
சான்றும் உள்ளதோ?
 

உயிர்களைப்   படைக்கும் பிரமனுக்கும் அந்தர்யாமியாயிருந்து
படைத்தலும்   காத்தலும்   செய்பவன்   திருமாலே   என்பதால்
"மன்னுயிர்   எல்லாம்   வருவித்து வளர்க்கும் மாயன்"   என்றார்.
உலகமும்   உலகத்திலுள்ள   தருமங்களும்  அந்தத் தருமங்களின்
பயனும் எல்லாம் தானேயாக விளங்குபவன் பரமன் என்பதால் 'தன்
அன   உலகமெல்லாம்   தருமமும்   எவையும்தானே"   என்றார்.
'சரணமாகும்   தன் தாள்  அடைந்தோர்க்கெலாம்   மரணமானால்
வைகுந்தம்  கொடுக்கும்   பிரான்"   (நாலாயிரம்-3067)   என்பது
நம்மாழ்வார் அருளிச் செயல். 
 

(111)
 

6476.

'நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன்,

"நாளும்

தஞ்சு" என, முன்னம், தானே தாதைபால் கொடுத்து, 

"சாதல்

அஞ்சினேன்; அபயம்!" என்ற அந்தணற்கு ஆகி,

அந் நாள்,

வெஞ் சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை

உண்டோ?

 

நஞ்சினை   மிடற்று   வைத்த -   (அமுதம்   வேண்டிப்
பாற்கடலைக்     கடைந்த    தேவர்கள்   விஷம்   என அஞ்சி
அடைக்கலமடைய) அந்த நஞ்சினால் தேவர்கள் நலியாதபடி