உண்டு கண்டத்திலே நிறுத்தி வைத்த; நகை மழுவாளன் - ஒளியுடைய மழுவை ஆயுதமாகக் கொண்ட சிவபிரான்; நாளும்தஞ்சு என - வாழ்நாள் குறைவாக (மார்க்கண்டனுக்கு); தாதைபால் கொடுத்து - தந்தையான மிருகண்டு முனிவருக்கு வரம்தந்தும்; சாதல் அஞ்சி அபயம் என்ற - சாவுக்கு அஞ்சினேன் நான் உனக்கு அடைக்கலம் என்று சரணடைந்த; அந்தணர்க்கு ஆகி - மறையவனான மார்க்கண்டனுக்கு அருள்புரிய; அந்நாள் வெஞ்சினக் கூற்றை - அந்த நாளிலே மார்க்கண்டனது உயிரைக் கவரவந்த கொடிய சினத்தை உடைய எமனை; மாற்றும் மேன்மையின்- குறைத்துத் தந்த வாழ்நாளை என்றும் பதினாறாக மாற்றிய சிவபெருமானுடைய மேலான பண்பைவிட; மேன்மை உண்டோ - மேலானது வேறேதும் உண்டோ? |
மிடறு-கழுத்து. நகை-ஒளி. |
(112) |
6477. | ' "சரண் எனக்கு யார்கொல்? என்று சானகி |
| அழுது சாம்ப, |
| "அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!" என்று |
| அருளின் எய்தி, |
| முரணுடைக் கொடியோன் கொல்ல,மொய்அமர் |
| முடித்து, தெய்வ |
| மரணம் என் தாதை பெற்றது என்வயின் வழக்கு |
| அன்று ஆமோ? |
| |
சரண் எனக்கு யார் கொல் என்று - (இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டபோது) எனக்கு அடைக்கலமளித்துக் காப்பவர் யார் என்று கூறி; சானகி அழுது சாம்ப - சீதா பிராட்டி அழுது சோர்ந்திருக்க; அரண் உனக்கு ஆவேன் - நான் உனக்கு அரணாக நின்று காப்பேன்; வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி - வஞ்சிக் கொடி போல்பவளே அஞ்சாதே என்று கருணை கொண்டு வந்து; முரணுடைக் கொடியோன் கொல்ல - முரண்பட்ட மனம் கொண்ட கொடியவனான இராவணன் வாளால் வெட்டிக்கொல்ல; மொய் அமர் முடித்து - இராவணனுடன் நெருங்கிய போர் செய்து முடித்து;தெய்வ மரணம் என் தாதை பெற்றது - தெய்வீக மரணத்தை எனக்குத் தந்தையான சடாயு பெற்றது; என் வயின் வழக்கன்றாமோ - எனக்கு மட்டும் முறையற்றதாகுமோ? ஆகாது. |
சரண்-அடைக்கலம் (புகலிடம்). சாம்ப-சோர்வுற, அரண்- பாதுகாப்பு அஞ்சல்-அஞ்சாதே. மொய் அமர்-நெருங்கிய போர். |