பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 259

சடாயுவைப் பெரிய உடையார் என   வைணவ உலகம் போற்றும்.
அந்தச்   சடாயு    பெற்ற   தெய்வமரணம்   நான்   பெறுவது
முறையாகுவதே   என்றான்   ராமபிரான்.   மானமே   நேரிலும்
சரணடைந்தோரைக்   காப்பதே   பேரறம்   என்பது   இராமன்
கருத்தாதல் காண்கிறோம். 
 

(113)
 

6478.

'உய்ய, 'நிற்கு அபயம்!" என்றான் உயிரைத் தன்

உயிரின் ஓம்பாக்

கய்யனும், ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும்,
மய் அற, நெறியின் நோக்கி, மா மறை நெறியில்

நின்ற

மெய்யினைப் பொய் என்றானும், மீள்கிலா நரகில்

வீழ்வார்.

 

உய்யநிற்கு அபயம் என்றான்- நான் உய்யுமாறு உன்னைச்
சரண்புகுந்தேன்   என்று   வந்த  ஒருவனுடைய; உயிரைத் தன்
உயிரின்   ஓம்பாக்கய்யனும்
-   உயிரினைத்   தன்னுயிராகக்
கருதிப்   பேணிக்காப்பாற்றாத   கீழ்மகனும்;   ஒருவன் செய்த
உதவியில் கருத்திலானும் 
-   ஒருவன்   செய்த   உதவியில்
கருத்தில்லாது மறந்தவனும்;   மய்அற   நெறியின் நோக்கி -
குற்றம் நீங்க,   அறநெறியை   அறிந்து;   மாமறை   நெறியில்
நின்ற
- சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும்;   மெய்யினைப்
பொய்   என்பானும்
-   உண்மை   நெறியைப்  பொய் என்று
கூறுபவனும்; மீள்கிலா நரகில் வீழ்வார் - மீண்டு  வரமுடியாத
கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவார். 
 

மய்-மை, குற்றம். மை, கையன் என்பன எதுகை நோக்கி மய்,
கய்யன் என   வந்தது.  மீள்கிலா  -  மீளமுடியாத   உலகத்தார்
உண்டென்பதில்   லென்பான்...  அலகையா வைக்கப்படும்" என்ற
குறள் (850) ஒப்பு நோக்கத்தக்கது. 
 

(114)
 

6479.

'சீதையைக் குறித்ததேயோ, "தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வேன்" என்று பேணிய விரதப் 

பெற்றி?

வேதியர், "அபயம்!" என்றார்க்கு, அன்று, நான்

விரித்துச் சொன்ன

காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல்

ஆமோ?