பக்கம் எண் :

260யுத்த காண்டம் 

தேவரைத்   தீமை   செய்த பேதையை- தேவர்களைத்
துன்புறுத்திய   அறிவில்லாத இராவணனை; கொல்வேன் என்று
பேணிய விரதப் பெற்றி
- கொல்லுவேன் என்று நானே விரும்பி
ஏற்றுக்கொண்ட   இந்த   விரதத்தின்    தன்மை;   சீதையைக்
குறித்ததேயோ 
-    சீதையை     மீட்டு    வருதலைமட்டும்
குறித்ததொன்றோ? அல்ல;  வேதியர்  அபயம் என்றார்க்கு -
அந்தணர்கள் என்னை அடைந்து அடைக்கலம் என்றவர்களுக்கு;
அன்று நான் விரித்துச் சொன்ன  
- அவர்கள்  சரணடைந்த
போது நான் விவரித்துக் கூறிய;  காதையைக் குறித்து நின்ற -
செய்தியைப் பற்றி நின்ற; அவ்வுரை கடக்கலாமோ - (அஞ்சல்
என்று கூறிய) அந்தச் சொல்லை நான் மீறலாமோ?
 

"அவதரித்துச் செய்த ஆணைத்தொழில்களெல்லாம் ஆசிரத
விரோதிகளை அழிப்பதற்கே" என்ற வைணவச் சான்றோர் உரை
நினையத்தக்கது.   காதை -  காதா  (பாடல்) இங்கு செய்தியைக்
குறித்தது. 
 

(115)
 

6480.

'காரியம் ஆக! அன்றே ஆகுக! கருணையோர்க்குச்
சீரிய தன்மை நோக்கின், இதனின்மேல் சிறந்தது

உண்டோ?

பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா 
ஆர் உயிர் கொடுத்துக் காத்தார், எண் இலா அரசர்

அம்மா!

 

காரியம் ஆக அன்றே ஆகுக  -   நாம் எடுத்த காரியம்
முற்றுப்   பெறட்டும்;    அல்லது     முடியாமல்   போகட்டும்;
கருணையோர்க்குச்     சீரிய     தன்மை   நோக்கின்
-
கருணையாளர்க்குரிய சிறந்த  தன்மையை ஆராய்ந்தால்; இதனின்
மேல்   சிறந்ததுண்டோ
  -   அடைக்கலம் என்று வந்தவனை
ஆதரித்துக்   காக்கும்   இதைவிட     மேலானதொன்றுண்டோ?
பூரியரேனும்  தம்மைப்   புகல்   புகுந்தோர்க்கு  
-  கீழ்
மக்களாயினும்  தங்களைச்   சரணடைந்தவர்களுக்கு;  பொன்றா
ஆருயிர்    கொடுத்துக்   காத்தார்
-   அழியாத தங்களது
ஆருயிரைத் தந்தும் காத்தவர்கள்; எண்ணிலா அரசர் அம்மா-
எண்ணிலடங்காத மன்னர்கள் (இவ்வுலகிலுண்டு).
 

காரியம்-மேற்கொண்ட செயங். ஆக - ஆகட்டும்   அன்றே
ஆகுக-ஆகாமல் போகட்டும் சீரியதன்மை-சிறந்தபண்பு.  பூரியர்-
கீழ்மக்கள். 
 

(116)