பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 261

6481.

'ஆதலான், "அபயம்!" என்ற பொழுதத்தே, அபய 

தானம்

ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர், என்பால் 

வைத்த

காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? 

கதிரோன் மைந்த!

கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி'

என்றான்.

  

ஆதலான் 'அபயம்' என்ற பொழுதத்தே- (இந்த வீடணன்
அடைக்கலம் என்று வந்திருக்கிறான்  அவனை   ஏற்றுக்கொள்ள
மேலே கூறிய காரணங்கள் சாலும்)   ஆதலால்   இவன் அபயம்
என்று   வந்த   அந்தச்  சமயத்திலேயே; அபயதானம் ஈதலே
கடப்பாடு  என்பது
- அபயதானம் தருவதே நமக்கரிய கடமை
என்பதை;     என்பால்    வைத்தகாதலால்   இயம்பினீர்-
என்பாலுள்ள அன்பால் கூடாதென்று சொன்னீர்கள்; இனி வேறு
என்ன கடவது என்
- இனி இதற்கு மாறாக எண்ணுதற்கு வேறு
என்ன இருக்கிறது;   கதிரோன்   மைந்த - சூரிய குமாரனான
சுக்கிரீவனே!   கோதிலாதவனை - குற்றமொன்றுமில்லாத இந்த
வீடணனை; நீயே   என்வயின்  கொணர்தி என்றான்- நீயே
சென்று என்னிடம் அழைத்துக்கொண்டு வருக என்றான்.
 

பொழுதத்து -  பொழுதிலே.  அபயதானம்-அடைக்கலமாகிய
தானம். கடப்பாடு-கடமை. இயம்பினீர்-சொன்னீர்கள்.  கதிரோன்-
சூரியன்.   கோதிலாதவன்   - குற்றமில்லாதவன்.   அடைக்கலம்
கொடுத்தற்குரிய காரணங்களைப்   பலவாறு   விரித்துக்   கூறிய
இராமபிரான் 'ஆதலால்' என்றது   அந்தக்காரணங்களால்  என்ற
பொருள்தந்து நின்றது. 'அபயம்' என்று வந்தவனை அப்பொழுதே
ஏற்றுகொள்வது அறம். இனி  எண்ணுதற்கு   எதுவுமில்லை நீயே
சென்று  அழைத்துவருக   எனச்   சுக்கிரீவனுக்குக்   கூறினான்.
இராமபிரான்.   அவர்கள்   முன்பு   மறுத்துக்கூறியதும்   கூட,
இராமபிரானுக்கு இவனால் துன்பம் நேருமோ என பெருமானிடம்
கொண்ட  அன்பினால்தான்   என்பதால்   "என்பால்   வைத்த
காதலால் இயம்பினீர்" என்றான்.
 

(117)
 

சுக்கிரீவன் வீடணனை அழைத்துவரச் செல்லுதல்
 

6482.

ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது 

அன்றே;

தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி.