| கைபுகற்கு அமைவது ஆனான், 'கடிதினின் |
| கொணர்வல்' என்னா, |
| மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்பால் |
| விரைவின் சென்றான். |
| |
ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய்- (சுக்கிரீவன்) மனதிலெண்ணிய ஐயமெல்லாம் தீர்ந்து ஒளியத்தக்க பிரமாணமாக; அமைந்தது அன்றே- அமைந்ததொன்றாக; தெய்வநாயகனதுள்ளம்- தெய்வங்களுக்கெல்லாம் நாயகனாகிய இராமபிரானுடைய உள்ளம்; தேறிய அடைவே தேறி- தெளிந்த முறையே நானும்தெளிவு பெற்று; கைபுகற்கு அமைவதானான்- வீடணன் நம்பக்கம் சேருதற்கு உடன்படுவானானான்; கடிதினில் கொணர்வல் என்னா - விரைவில் அவனை இங்கு அழைத்து வருவேன் என்று; மெய்யினுக்கு உறையுளான ஒருவன் பால் விரைவில் சென்றான் - உண்மைக்கு உறைவிடமான ஒப்பற்றவனாகிய வீடணனிடம் விரைந்து சென்றான். |
அளவை - பிரமாணம். அடைவு - முறைமை. அமைவது- உடன்படுவது. இலங்கையில் மெய்தங்குவதற்கு புகலிடமளித்தவன் வீடணன் என்பதால் "மெய்யினுக்கு உறையுள்" என்றார். |
(118) |
சுக்கிரீவன் வருகையை அறிந்து வீடணன் எதிர் செல்லுதல் |
6483. | வருகின்ற கவியின் வேந்தை, மயிந்தனுக்கு இளைய |
| வள்ளல், |
| ' "தருக!" என்றான்; அதனால், உன்னை எதிர் |
| கொளற்கு அருக்கன் தந்த, |
| இரு குன்றம் அனைய தோளான் எய்தினன்' |
| என்னலோடும், |
| திரிகின்ற உள்ளத்தானும், அகம் மலர்ந்து, அவன் |
| முன் சென்றான். |
| |
வருகின்ற கவியின் வேந்தை - (வீடணனை அழைத்துச் செல்ல) வருகின்ற வானர வேந்தனான சுக்கிரீவன்; மயிந்தனுக்கு இளைய வள்ளல் - மயிந்தனுக்குத் தம்பியான துமிந்தன்; 'தருக' என்றான் - (வீடணனிடம்) உன்னை அழைத்து வருமாறு இராமபிரான் கூறினான்; அதனால் உன்னை எதிர் கொளற்கு - |