அதனால் உன்னைச் சந்திப்பதற்கு; அருக்கன் தந்த - சூரியன் புத்திரனாக தந்த; இருகுன்றம் அனைய தோளான் - இரண்டு மலைகளை ஒத்த தோள்களை உடையவனான சுக்கிரீவன்; எய்தினன் என்னலோடும் - இங்கு வந்தான் என்றவுடன்; திரிகின்ற உள்ளத்தானும் - இராமபிரான் ஏற்றுக்கொள்வானோ மாட்டானோ என நினைத்து அலையும் மனத்தினனான வீடணன்; அவன் முன் சென்றான்- சுக்கிரீவனுக்கு முன்பு சென்றான். |
கவியின் வேந்து-சுக்கிரீவன். தருகஎன்றான்-தருகென்றான் என நின்றது. இராமன் தன்னை ஏற்றுகொள்வானோ? மாட்டானோ என்ற ஐயத்தால் ஒரு நிலையில் நில்லாது அலைந்த மனத்தை "திரிகின்ற உள்ளம்" என்றார், துமிந்தன் 'தருகென்றான்' என்று சொல்லக் கேட்டதும் வீடணன் மனம் மகிழ்ந்தது என்பதனை " அகம் மலர்ந்து" என்றார். |
(119) |
சுக்கிரீவனும் வீடணனும் தழுவிக் கொள்ளுதல் |
6484. | தொல் அருங் காலம் எல்லாம் பழகினும், தூயர் |
| அல்லார் |
| புல்லலர்; உள்ளம் தூயார் பொருந்துவர், எதிர்ந்த |
| ஞான்றே; |
| ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒரு |
| நாள் உற்ற |
| எல்லியும் பகலும் போல, தழுவினர், எழுவின் |
| தோளார். |
| |
தொல்அருங் காலமெல்லாம் பழகினும் - நீண்ட நெடுங்காலம் நெருங்கிப் பழகி வந்தாலும்; தூயர் அல்லார் புல்லர் - மனத்தூய்மையில்லாதவர்கள் ஒன்றுபடமாட்டார்; உள்ளம் தூயார் எதிர்ந்த ஞான்றே பொருந்துவர் - தூயமனம் கொண்ட மேலோர் சந்தித்த அப்போதே ஒன்றிவிடுவர்; ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற - விரைந்து வந்து, ஒத்த உணர்வுடன் சந்தித்த; இருவரும் - சுக்கிரீவன், வீடணன் ஆகிய இருவரும்; ஒருநாள் உற்ற எல்லியும் பகலும் போல- ஒருநாளில் பொருந்திய இரவும் பகலும் போல; எழுவின் தோளார் தழுவினர்- தூண் போன்ற தோளினராகிய அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர். |