தொல்பெருங்காலம் - பழமையான நீண்ட காலம். "நூறாண்டு பழகினும் மூர்க்கர்கேண்மை நீர்கொள் பாசிபோல் வேர்கொள்ளாதே" ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்கவேர் வீழ்க்கும்மே" என்றது இங்கு நினைவு கூறத்தக்கது. எல்லி-இரவு. எழு-தூண். வீடணன் கருமை நிறம் (இரவு); சுக்கிரீவன் வெண்மை நிறம் (பகல்). எனவே, "இருவரும் ஒருநாள் உற்ற எல்லியும் பகலும் போலத் தழுவினர்" என்பது பொருந்துவதாயிற்று, பொதுப்பொருள் கூறி, சிறப்புப்பொருளை விளக்குவதால் இது வேற்றுப் பொருள்வைப்பணி ஆயிற்று. "தூயரல்லார் புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர்" என்பது பொதுப்பொருள். "சுக்கிரீவனும் வீடணனும் தழுவினர்" என்பது சிறப்புப் பொருள். |
(120) |
வீடணனுக்கு இராமன் அடைக்கலம் தந்ததைச் சுக்கிரீவன் தெரிவித்தல் |
6485. | தழுவினர் நின்ற காலை, 'தாமரைக்கண்ணன் தங்கள் |
| முழு முதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை |
| மூள, |
| வழுவல் இல் அபயம் உன்பால் வழங்கினன்; அவன் |
| பொற் பாதம் |
| தொழுதியால், விரைவின்' என்று கதிரவன் சிறுவன் |
| சொன்னான். |
| |
தழுவினர் நின்ற காலை- சுக்கிரீவனும் வீடணனும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு நின்றபோது; தாமரைக் கண்ணன் - தாமரை மலர் போன்ற கண்களை உடைய ராமபிரான்; தங்கள் முழு முதல் குலத்துக்கு- தமது சிறந்த முதன்மை வாய்ந்த சூரிய குலத்தின் இயல்புக்கு; ஏற்ற முறைமையால்- பொருந்திய முறைப்படி; உவகை மூள - மனத்திலே மகிழ்ச்சி பொங்க; உன்பால் வழுவல் இல் அபயம் வழங்கினன் - உனக்குக் குறையிலாத அபயத்தை வழங்கினான் எனவே; அவன் பொற்பாதம் - அப்பெருமானது பொன்னடிகளை; விரைவின் தொழுதியால்- விரைந்து வணங்குவாயாக; என்று கதிரவன் சிறுவன் சொன்னான் - என்று வீடணனை நோக்கி சூரியன் மகனான சுக்கிரீவன் கூறினான். |
அடைக்கலம் என வந்தவரை ஏற்றருள் புரிதல் சூரிய குலத்தோருக்குரிய பண்பாதலின் "குலத்துக்கேற்ற முறைமையால்" என்றான். குலத்துக்கேற்ப வழங்கினான் எனினும் தான் விரும்பி வழங்கினானா என்பதற்கு விடையாக "உவகை மூள வழங்கினன்" |