பக்கம் எண் :

44   யுத்த காண்டம்

வியக்கவைக்கிறது.   இத்தகைய  ஒரு பாத்திரப் படைப்பை வேறு
எந்த இலக்கியத்திலும் காண முடியாது.
 

இந்திரசித்து :  சுந்தர   காண்டத்தின் பிணிவீட்டு  படலத்தில்,
இந்திரசித்தின்       ஒரு     பகுதியை    நாம்   காணமுடிகிறது.
இந்திரசித்தனையும், கும்பகர்ணனையும்  கவிச்சக்கரவர்த்தி  நமக்கு
அறிமுகம்           செய்யும்      நேரத்தில்        அவர்கள்
உறங்கிக்கொண்டிருக்கின்றனர். காப்பியத்தில்  உள்ள பெருவீரர்கள்
வரிசையில்   இருவரும் இடம்  பெறுகின்றவர்கள்.   சாதாரணமாக,
பெருங்காப்பியங்களில்          பெருவீரர்களை        கவிஞன்
அறிமுகப்படுத்தும்பொழுது      அவர்கள்    போர்     செய்யும்
சந்தர்ப்பத்திலோ      சூளுரை  வழங்கும்  சந்தர்ப்பத்திலோதான்,
அறிமுகம்  செய்வர். உலகக்   காப்பியங்கள் பெரும்பாலானவற்றில்
இம்முறைதான் கையாளப்படும். இதற்கு மாறாக, கும்பன், இந்திரசித்து
ஆகிய  இருவரையும் உறங்குகின்ற நிலையில் அறிமுகம் செய்கிறான்
கம்பன்.   உறங்குகின்ற  இவர்களை   மறைவாக நின்று காண்பவன்
மாருதி    என்பதை   மறத்தலாகாது. அறிவின் வடிவமாகிய மாருதி
முதன்முதலில்    இன்னார்   என்று அறியாமலேயே தனித்தனியாக
இவர்களைக் காண்கிறான். உறங்குகின்ற இந்திரசித்தனைக் காணுகிற
மாருதியின் மனத்தில் தோன்றும் எண்ணங்களைக்   கம்பன் இதோ
கூறுகிறான்:
  

............................................................ கணிச்சியான் மகனோ?
அளையில் வாள் அரி அனையவன்-யாவனோ? அறியேன்;
இளைய வீரனும், ஏந்தலும், இருவரும், பலநாள்
உளைய உள்ளபோர் இவனொடும் உளது' எனஉணர்ந்தான்

(4975)
 

இவனை இன்துணை உடையபோர் இராவணன், என்னே
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் எனப்புகறல்?
சிவனை, நான்முகத்து ஒருவனை, திருநெடுமால் ஆம்
அவனை, அல்லவர் நிகர்ப்பவர் என்பதும், அறிவோ?

(4976)
 

பகைமை,   வெறுப்பு, சினம் இவற்றால்    நிறைந்த  மனத்துடன்
உறங்குகின்ற    பகைவனைப்    பார்க்கின்றான்   அனுமன். அவன்
இந்திரசித்து என்பதும், இராவணன் மகன் என்பதும்   அனுமனுக்குத்
தெரியாத நிலை, என்றாலும்