பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 265

என்றான்.   இந்த   அபயம்   எக்குறையும் இல்லாதது என்பான்,
வழுவல்   இல்     அபயம்   (என்றும்   மாறாதது)   என்றான்.
பெறுதற்கரிய பேற்றினை   விரைந்து பெறுக என்பான் 'விரைவின்
தொழுதி" என்றான். 
 

(121)
 

வீடணன் கொண்ட மகிழ்ச்சி
 

6486.

சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி 

புகாமுன்,

கங்குலின் நிறத்தினான்தன் கண் மழைத் தாரை 

கான்ற:

அங்கமும் மனம்அது என்னக் குளிர்ந்தது; அவ் 

அகத்தை மிக்குப்

பொங்கிய உவகை என்னப் பொடித்தன, உரோமப் 

புள்ளி.

 

சிங்க   ஏறு   அனையான்   -    ஆண்   சிங்கத்தைப்
போன்றவனான சுக்கிரீவன்; சொன்ன வாசகம்- கூறிய சொற்கள்;
செவிப்படாமுன் - தனது  காதுகளில்   வீழ்வதற்கு   முன்பே;
கங்குலின் நிறத்தினான் தன்-   இரவு  இருள் போன்ற நிறம்
உடைய வீடணனது; கண் மழைத்தாரை   கான்ற  -  கண்கள்
மழைத்தாரையொத்த     நீரைப்    பொழிந்தன;     அங்கமும்
மனமதென்னக் குளிர்ந்தது 
-   அவனது   உடல்   முழுதும்
மனம்போலக்   குளிர்ந்தது;  அவ்வகத்தை மிக்குப் பொங்கிய
உவகை என்ன
-     அந்த   மனத்தில்   நிறைந்து  பொங்கிய
மகிழ்ச்சியைப் போல;    உரோமப்புள்ளி     பொடித்தன  -
மயிர்க்கூச்செறிந்தன.
 

மகிழ்ச்சியால்   மனம் குளிர்ந்தது போல உடலும் குளிர்ந்தது
என்பதும்   உள்ளத்தே     எழுந்த     உவகையை    உரோம
புளகாங்கிதத்தால் உடல் வெளிப்படுத்தியது என்பதும்   தண்ணீர்
வழிந்தது என்பதும் உவகை மெய்ப்பாடுகளாம். 
 

(122)
 

6487.

' "பஞ்சு" எனச் சிவக்கும் மென் கால் தேவியைப்

பிரித்த பாவி

வஞ்சனுக்கு இளைய என்னை, "வருக!" என்று 

அருள் செய்தானோ?

தஞ்சு எனக் கருதினானோ? தாழ் சடைக் கடவுள் 

உண்ட

நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின்

நாயேன்?