பக்கம் எண் :

266யுத்த காண்டம் 

பஞ்சு எனச் சிவக்கும் - தோழியர்   செம்பஞ்சு   ஊட்ட
வேணும் என்று சொன்னவுடன் பொறாமல் சிவக்கின்ற; மென்கால்
தேவியை
-   மென்மையான  பாதங்களை உடைய சீதாதேவியை;
பிரித்த பாவி வஞ்சனுக்கு  -   இராமபிரானிடமிருந்து   பிரியச் 
செய்த   பாவியும்,   வஞ்சகனுமான   இராவணனுக்கு;   இளைய
என்னை
-   இளைய  தம்பியாகிய என்னை; வருக என்றுஅருள்
 செய்தானோ
-வருவானாக எனக்கூறி அருள்புரிந்தானோ; தஞ்சு
எனக்   கருதினானோ 
  -   என்னையும் அடைக்கலம் என்று
கருதினானோ; நாயகன் அருளின் நாயேன்-   அடியவனாகிய
நான் பெருமானுடைய   திருவருளால்;   தாழ்சடைக்   கடவுள்
உண்ட
- தாழ்ந்த சடையை   உடைய  கடவுளான சிவபெருமான்
அன்று உண்ட; நஞ்சு எனச்   சிறந்தேன்  அன்றோ - நஞ்சு
எவ்வாறு சிவன் உண்டதால்  சிறந்ததாயிற்றோ அதுபோல நானும்
சிறந்தேன் அன்றோ.
 

சீதாபிராட்டியின்   மென்மையான   பாதங்களைச் சிறப்பித்து
"பஞ்சு என சிவக்கும் மென்கால்தேவி"    என்றான். அனுக்கிரக
தேவதை   என்பதால்   திருவடியை   நினைத்தான்   போலும்.
இணைபிரியாத    தெய்வீக     தம்பதிகளான   இராமனையும்,
சீதையையும்  சேர்ந்து வாழ விடாதபடி பிரித்த பாவச் செயலின்
கொடுமை   தோன்ற   "பாவி   வஞ்சன்"   என்றார்.   அருள்
செய்வானோ  தஞ்செனக் கருதுவானோ என்றெல்லாம் திரிகின்ற
உள்ளத்தனாகிய வீடணன் "உன்பால் அபயம் வழங்கினன்" எனக்
கேட்டு   மகிழ்ச்சி  தோன்ற 'வருக என்று அருள் செய்தானோ
தஞ்சு   எனக்   கருதினானோ'  என  வியந்துரைத்தான் என்க.
நஞ்சாயினும்  சிவபிரான்   உண்டதால்,   நிலையான   வாழ்வு
பெற்றுச்   சிறந்து   விளங்குதல்  போல, அரக்கனாகிய நானும்
நாயகன் அருளால் சிறந்தேன் என மகிழ்ந்து கூறினான் என்க. 
 

(123)
 

6488.

'மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான்;

வானத்து 

உருளுறு தேரினானும், இலங்கைமீது ஓடும் அன்றே?
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின், 

செய்யும்

அருள் இது ஆயின், கெட்டேன்! பிழைப்பரோ

அரக்கர் ஆனோர்?

 

மருள் உறு மனத்தினான்- காம   மயக்கத்தை  உடைய
மனத்தினனான இராவணன்; என்  வாய்மொழி   மறுத்தான்-
எனது வாய்மொழியை