பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 267

மறுத்துவிட்டான்.   வானத்து   உருள்  உறு தேரினானும் -
வானவீதியிலே ஒற்றையாழித் தேரை உடையவனாகிய சூரியனும்;
இலங்கை   மீது    ஓடுமன்றே  - இனி   இலங்கை   மீது
செல்வானல்லவா?   தெருள்   உறு    சிந்தை   வந்த -
இராமபிரானுடைய தெளிந்த   மனத்தில் இருந்து வந்த; தேற்றம்
ஈதாகின்
- உறுதியான எண்ணம் இதுவானால்; செய்யும் அருள்
ஈதுவாயின்
- எனக்குச் செய்யும் அருள் இதுவானால்; அரக்கர
 ஆனோர் பிழைப்பரோ
  -   அரக்கர்கள்  பிழைப்பார்களா?
கெட்டேன்
- நான் கெட்டேன்.
 

உருள் உறுதேர்-சூரியனது ஒற்றை யாழித்தேர். கெட்டேன்-
அரக்கரது பேரழிவைப் புலப்படுத்தும் இரக்கக் குறிப்புச் சொல்.
சீதாபிராட்டியைத் தவறான நோக்கத்தால், வஞ்சகமாகக் கவர்ந்து
சென்று   சிறை    வைத்தமையால்     இராவணனை   "மருள்
உறுமனத்தினான்" என்றான்.   இராவணனது ஆணைக்கு அஞ்சி,
இதுவரை ஒதுங்கிச் சென்ற சூரியன்   இனிமேல்   இலங்கைமீது
நேராகச்  செல்ல   நேரும்   என்பான்.   "உருளுறுதேரினானும்
இலங்கை மீதோடு மன்றே" என்றான். இராமபிரானுடைய தெளிந்த
மனத்தே தோன்றிய உறுதியான  எண்ணம் எனக்குப் புகல் தந்து
காப்பது என்ற இதுவானால் என்பான். "தெருள்   உறு   சிந்தை
வந்த தேற்றம் ஈதாயின்" என்றான். 
 

(124)
 

6489.

'தீர்வு அரும் இன்னல் தம்மைச் செய்யினும், செய்ய

சிந்தைப்

பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது 

உண்டோ?-

கார் வரை நிறுவி, தன்னைக் கனல் எழக் கலக்கக்

கண்டும்,

ஆர்கலி, அமரர் உய்ய, அமுது பண்டு அளித்தது 

அன்றே?

 

செய்ய   சிந்தைப்     பேரருளாளர்  -  செம்மையான
மனத்தையுடைய,   மேன்மையான அருளாளர்கள்; தீர்வு அரும்
இன்னல் தம்மைச்    செய்யினும் 
  -    தமக்குத்   தீராத
இன்னல்களைப்   பிறர் செய்தாலும்;   தம்தம்   செய்கையின்
பிழைப்பதுண்டோ
-   தமக்கே  உரிய நல்ல செய்கையிலிருந்து
மாறுபடுவார்களோ;   கார்வரை நிறுவி-  கருமையான பெரிய
(மந்தர) மலையை மத்தாக நாட்டி;